பள்ளிகளுக்கு வெளியே நடமாடிய 'கோமாளிகளால்' பதற்றம்

பள்ளிகளுக்கு வெளியே நடமாடிய 'கோமாளிகளால்' பதற்றம்

2 mins read
0c0fb53d-3fc9-46e4-9427-c2c49b656bd7
கோமாளியாக வேடமிட்டு பள்ளிக்கு வெளியே உலவியவர்களில் ஒருவர். படம்: டான் சுவான் ஜின் ஃபேஸ்புக் -

தன் ஊழி­யர்­க­ளுக்­குக் கோமா­ளி­போல் ஆடை அணி­வித்து, தொடக்­கப் பள்­ளி­க­ளுக்கு வெளியே நட­மா­டச் செய்த நிறு­வ­னத்­தின் செயல் பர­ப­ரப்­பை­யும் பதற்­றத்­தை­யும் ஏற்­

ப­டுத்­தி­யது.

இதற்­காக சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னம் மன்­னிப்பு கோரி­யது.

மரின் பரே­ட்டில் டாவ் நான் பள்­ளிக்கு வெளியே கோமா­ளி­போல் வேட­மிட்ட ஒரு­வர் காணப்­பட்­டதை அடுத்து, அத்­த­கைய கோமா­ளி­

க­ளைத் தங்­க­ளின் பிள்­ளை­கள் பின்­தொ­ட­ரா­மல் பார்த்­துக்­கொள்­ளும்­படி அந்­தத் தொடக்­கப் பள்­ளி­யின் தலைமையாசி­ரி­யர், பெற்­றோர்­க­ளுக்கு விழிப்­பூட்­டி­னார்.

'ஸ்பீச் அகா­டமி ஏஷியா' என்ற செறி­வூட்டு நட­வ­டிக்கை மையத்­தின் பேச்­சுத்­தி­றன் வகுப்­பு­கள் குறித்து விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்­காக, கடந்த இரு வாரங்­க­ளா­கத் தனது சந்­தைப்­ப­டுத்­தல் குழு­வி­ன­ரைச் சிங்­கப்­பூ­ரின் கிழக்கு, மேற்­குப் பகுதிக­ளுக்கு அனுப்­பி­ய­தாக அந்­தக் கல்வி நிலை­யத்­தின் இயக்­கு­நர் கெல்­வின் டான் கூறி­னார்.

மாண­வர்­கள் பொது­வி­டங்­களில் பேசும் திறனை வளர்த்­துக்­கொள்ள அந்­தத் தனி­யார் கல்வி நிலை­யம் வழி­காட்­டு­கிறது.

"அதன் பின்­ன­ணி­யில் எந்­தக் கெட்ட எண்­ண­மும் இல்லை. இனி அவ்­வாறு செய்­ய­மாட்­டோம்," என்­றார் திரு கெல்­வின்.

கோமாளி வேட­மிட்­ட­வர்­கள் தங்­க­ளைப் பின்­தொ­ட­ரும்­படி மாண­வர்­க­ளி­டம் கூறி­ய­தா­கச் சொல்­லப்

­ப­டு­வதை மறுத்த திரு டான், "எங்­கள் ஊழி­யர்­கள் அப்­படி ஒரு­போ­தும் கூற­மாட்­டார்­கள்," என்­றார்.

கோமாளி உடை­யு­டன் பிடோக் சவுத்­தில் காணப்­பட்ட ஒரு படத்­தை நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்த நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின், "இது ஒரு விளம்­பர உத்­தி­யாக இருக்­க­லாம் என்று நினைக்­கி­றேன். இந்த முட்­டாள்­

த­னத்­தைச் செய்­ப­வர் யாராக இருந்­தா­லும் அதை உடனே நிறுத்­துங்­கள்!" என்று சாடி­யி­ருந்­தார்.

அத்­து­டன், "இது­கு­றித்­து காவல்­துறை விசா­ரணை நடத்தும் என்று நம்­பு­கி­றேன். இது வேடிக்­கை­யா­னது அல்ல, ஆபத்­தா­னது," என்­றும் திரு டான் பதி­விட்டு இருந்­தார்.

மரின் பரேட் குழுத்­தொ­குதி எம்.பி.யும் மனி­த­வள அமைச்­ச­ரு­மான டான் சீ லெங், தங்­கள் பிள்­ளை­களை விழிப்­பு­டன் இருக்­கு­மா­றும் ஒரு­வேளை பெற்­றோர்­க­ளுக்­கா­கக் காத்­தி­ருக்க நேர்ந்­தால் பள்­ளித் திட­லி­லேயே இருக்­கு­மா­றும் தங்­கள் பிள்­ளை­க­ளி­டம் பெற்­றோர்­கள் நினை­வூட்ட வேண்­டும் என்­றும் பெற்­றோர்­க­ளுக்கு வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

மக்களைச் சென்றடையும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 'அழகான உருவச்சின்னங்கள்' போன்று வேடமிடும்படி தங்களது சாலைக்காட்சிக் குழுவினர் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் கோமாளிபோல் வேடமிட்டது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்றும் திரு கெல்வின் சொன்னார்.

"ஒருவேளை அந்தக் கோமாளிகள் அச்சம் தரும் விதமாக இருந்திருக்கலாம். அது தவறு. இனி அப்படிச் செய்ய மாட்டோம்," என்றார் அவர்.

காத்தோங், தெம்பனிஸ் போன்ற பல பகுதிகளில் கடந்த வாரம் அத்தகைய கோமாளிகள் காணப்பட்டதாகச் சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.