சிங்கப்பூர் ஆயுதப்படையின் மூத்த தொண்டூழியர்கள் கூடுதல் பொறுப்பு ஏற்கின்றனர்.
தொண்டூழியர் பிரிவில் ஐந்து பதவிகள் உள்ளன. அதில் எஸ்வி4 ஆகப் பெரிய பதவி.
புதிய தொண்டூழியர்களுக்குத் தலைமை தாங்கும் கூடுதல் பொறுப்பு உயர் பதவி தொண்
டூழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தலைமைத்துவப் பயிற்சியிலும் ஈடுபட வேண்டும்.
பெண்கள், முதல் தலைமுறை நிரந்தரவாசிகள், சிங்கப்பூர் குடியுரிமையைப் புதிதாகப் பெற்றவர்கள் ஆகியோரில் தேசிய சேவைக்குச் செல்லத் தேவையில்லாத 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் சிங்கப்பூர் ஆயுதப்
படையின் தொண்டூழியர் பிரிவில் சேரலாம்.
இவர்கள் ஆண்டுக்கு 14 நாட்கள் வரை சேவையாற்றலாம். அடிப்படைப் பயிற்சியை முடித்த பிறகு, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு ஏற்ப, கூடுதல் பயிற்சி அளிக்கப்படும்.
தயார்நிலை தேசிய சேவை
யாளர்களைப் போல சேவையாற்ற இவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவ்வாறு நிகழும்போது அவர்களது முதலாளிகள் அவர்
களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

