கடுமையான காயங்களை விளைவித்தவருக்குச் சிறை

2 mins read
fd016f84-6a23-4a8c-933e-9fd5877fb549
-

சாலை விபத்­துக்­குக் கார­ண­மாக இருந்த 76 வயது மருத்­து­வ­ருக்கு நான்கு நாட்­கள் சிறைத் தண்­ட­னை­யும் $5,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

அனைத்து வகை வாக­னங்­களை ஓட்ட அவ­ருக்கு பத்­தாண்டு தடை­யும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கவ­னக்­கு­றை­வு­டன் கார் ஓட்டி, மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்த இரு­வ­ருக்­குக் கடு­மை­யான காயங்­களை விளை­வித்த குற்­றத்தை ரோஜர் பாங் ஹெங் மன் ஒப்­புக்­கொண்­டார்.

2019ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 11ஆம் தேதி இரவு 8 மணி அள­வில், புக்­கிட் பாத்­தோக் ஈஸ்ட் அவென்யூ 6ல் இந்த விபத்து நிகழ்ந்­தது.

மோட்­டார் சைக்­கி­ளுக்கு வழி­வி­டா­மல் தமது காரை பாங் வலது பக்­கம் திருப்­பி­யதை அடுத்து, விபத்து ஏற்­பட்­டது.

இதில் மோட்­டார் சைக்­கிளை ஓட்­டிய திரு முகம்­மது ஸகிர் சக்­கா­ரி­யா­வும் அவ­ரு­டன் பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்த திரு­வாட்டி ஐஷா நபிலா ஜைனி­யும் காய­முற்­ற­னர். 21 வயது முகம்­மது ஸகி­ரின் மூன்று கால் விரல்­க­ளைத் துண்­டிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 22 வயது திரு­வாட்டி ஐஷா­வுக்கு வலது கால் உட்­பட பல இடங்­களில் எலும்பு முறிவு ஏற்­பட்­டது.

மோட்­டார் சைக்­கிள் மீது மோதி­யதை அடுத்து, பாங் தமது காரி­லி­ருந்து வெளி­யேறி காய­ம் அடைந்த இரு­வ­ருக்­கும் உத­வி­னார். வேக வரம்­பைத் தமது

கட்­சிக்­கா­ரர் மீற­வில்லை என்­றும் கடந்த 57 ஆண்­டு­க­ளாக அவ­ருக்கு கார் ஓட்­டும் அனு­ப­வம் உள்­ளது என்­றும் பாங்­கின் வழக்­க­றி­ஞர் வாதிட்­டார். சாலை விதி­மு­றையை மீறி­ய­தாக அவர் மீது இதற்கு முன்பு எவ்­வி­தப் பதி­வும் இல்லை என்­றார் அவர்.

கண்­பு­ரை­யால் பாங் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அது அவ­ரது கண் பார்­வை­யைப் பாதித்­தி­ருக்­கக்­கூ­டும் என்­றும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இருப்­பி­னும், இதை நீதி­பதி ஏற்க மறுத்­தார். கவ­னக்­கு­றை­வு­டன் பாங் காரை வலது பக்­கம் திருப்­பி­ய­தால் விபத்து ஏற்­பட்­ட­தாக அவர் தெரி­வித்­தார்.