தொழில்நுட்பப் பொறுப்பு: 150 பேரை வேலைக்கு எடுக்கும் டிபிஎஸ்

டிபி­எஸ் வங்கி, தொழில்­நுட்­பப் பொறுப்­பு­களில் 150 பேரை வேலைக்கு எடுக்­க­வுள்­ளது. அந்த வங்கி முன்­னெ­டுக்­கும் திட்­டம் ஒன்­றின் மூலம் வேலைக்­குச் சேர விண்­ணப்­பித்­த­வர்­க­ளின் ஆற்­றல் சோதிக்­கப்­படும்.

'டிபி­எஸ் ஹேக்2ஹயர்' எனும் அத்­திட்­டம், 14 மேம்­பாட்­டா­ளர், பொறி­யி­யல் பொறுப்­பு­களில் பணி­யி­டங்­களை நிரப்ப இலக்கு கொண்­டுள்­ளது.

செயற்கை நுண்­ண­றிவு, இயந்­தி­ர­வி­யல் கற்­றல், 'புளோக்­செ­யின்' தொழில்­நுட்­பங்­கள் ஆகி­ய­வற்­றின் பயன்­பாட்டை அந்த வங்கி விரி­வுப்­ப­டுத்தி வரு­கிறது.

"புதிய பட்­ட­தா­ரி­களும் அனு­ப­வ­மிக்க நிபு­ணர்­களும் பணி­யில் சேர விண்­ணப்­பிக்­க­லாம்," "சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய வங்­கி­யான டிபி­எஸ் நேற்று கூறி­யது.

இம்­முறை நான்­கா­வது ஆண்­டாக 'ஹேக்2ஹயர்' திட்­டம் இடம்­பெ­று­கிறது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை சூழல் கார­ண­மாக இத்­திட்­டம் கடந்த ஆண்டு இடம்­பெ­ற­வில்லை.

முந்­தைய ஆண்­டு­களில் இத்­திட்­டத்­தின் மூலம் ஏறக்­கு­றைய 120 பேரை டிபி­எஸ் பணி­ய­மர்த்­தி­யது.

பணி­யில் சேர விரும்­பு­வோர் அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை விண்­ணப்­பிக்­க­லாம்.

நிர­லி­டு­தல், தொழில்­நுட்ப ஆற்­றல் ஆகி­ய­வற்றை மதிப்­பி­டும் இணை­யச் சவால் ஒன்­றில் அவர்­கள் பங்­கேற்க வேண்­டும்.

வங்­கி­யின் கலா­சா­ரத்­திற்­குப் பொருத்­த­மா­ன­வர்­க­ளா என்­ப­தைக் கண்­ட­றிய வெற்­றி­க­ர­மான விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு நேர்

முகத் தேர்வு நடத்­தப்­படும்.

விருப்­ப­முள்­ள­வர்­கள் https://www.dbs.com/hack2hire/sg/index.html எனும் இணை­யப்­பக்­கத்­திற்­குச் செல்­ல­லாம்.

கடந்த மே மாதத்­தில் தொழில்­நுட்­பப் 'பொறுப்­பு­களில் டிபி­எஸ் மக­ளிர்' எனும் மெய்­நி­கர் வேலைச் சந்­தை­யில் பெண்­க­ளுக்­காக 140 வேலை வாய்ப்­பு­கள் அறி­விக்­கப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!