‘பூஸ்டர்’ தடுப்பூசி போட அதிகமானோருக்கு அழைப்பு

'பூஸ்­டர்' தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகு­தி­பெ­றும் 140,000 மூத்த குடி­மக்­க­ளுக்கு இதுவரை அழைப்பு விடுக்­கப்­பட்டுள்­ளது. கூடு­த­லா­னோ­ருக்கு இனி வாரந்தோறும் அழைப்பு விடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

'பூஸ்­டர்' தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள மூத்த குடி­மக்­கள், 60 வய­தைத் தாண்­டி­ய­வர்­கள் என்று அமைச்சு குறிப்­பிட்­டது. எல்லா தடுப்­பூசி நிலை­யங்­கள், பல­துறை மருந்­த­கங்­கள், 'பிஹெச்­பிசி' எனப்­படும் பொது சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கங்­கள் ஆகி­ய­வற்­றில் மூத்த குடி­மக்­கள் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்று அமைச்சு சொன்­னது.

'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொள்­வ­தற்­கான நேரத்­தைத் தேர்ந்­தெ­டுக்­க­வேண்­டும் என்று அமைச்சு சுட்­டி­யது. அவ்­வாறு செய்­யா­மல் நேர­டி­யா­கச் சென்று தடுப்­பூசி போட்டுக்­கொள்­வ­தும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

சிங்­கப்­பூ­ரின் தேசிய 'பூஸ்­டர்' தடுப்­பூசித் திட்­டம் இம்­மா­தம் 15ஆம் தேதி­யன்று தொடங்­கி­யது. இவ்­வாண்டு மார்ச் மாதத்­தில் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்ட மூத்த குடி­மக்­கள் முதலில் 'பூஸ்­டர்' தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளத் தகு­தி­பெ­று­வர்.

'பூஸ்டர்' தடுப்பூசி போட தேவைக்கும் அதிகமான தடுப்பூசி போடும் நிலையங்களும் இடங்களும் இருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் பொதுமக்களுக்கு உத்தரவாதம் தந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!