பெண் தொழிலதிபர்களுக்கு உதவ புதிய கட்டமைப்பு

பெண் தொழிலதிபர்களுக்கு உதவ புதிய கட்டமைப்பு

1 mins read
c7129c79-7e3f-49fc-8c64-d64f8a8ab1c5
-

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் உள்ள பெண் தொழி­ல­தி­பர்­கள் உள்­ளிட்­டோரை இணைக்க சிங்­கப்­பூர் வர்த்­த­க சம்­மே­ள­னம் புதிய கட்­டமைப்பு ஒன்­றைத் தொடங்­கி­யுள்ளது. 'எஸ்-ஜி வென்' எனும் சிங்­கப்­பூர் பெண் தொழி­ல­தி­பர்­கள் கட்­ட­மைப்பு, குறிப்­பாக தென்­கி­ழக்­கா­சி­யா­வில் உள்­ள­வர்­களை இணைக்­கும்.

வட்­டா­ர அள­வில் இயங்­கும் வர்த்­த­கத் தலை­வர்­கள், வர்த்­த­கச் சங்­கங்­கள் ஆகி­ய­வற்­று­ட­னும் தொழி­ல­தி­பர்­களை இணைக்க நேற்று தொடங்­கப்­பட்ட இந்­தக் கட்­ட­மைப்பு உத­வும். இதன் மூலம் பல்­வேறு துறை­கள், பின்­னணி­க­ளைச் சேர்ந்த பெண் தொழில­தி­பர்­களை ஈர்ப்­பது நோக்­கம் என்று சிங்­கப்­பூர் வர்த்­த­கச் சம்­மே­ள­னம் கூறி­யது.

ஆண் வர்த்­த­கர்­க­ளுக்கு இருக்­கும் கட்­ட­மைப்­பு­க­ளைக் காட்­டி­லும் பொது­வாக பெண்­க­ளுக்­கான கட்­டமைப்பு சிறி­ய­ அளவில் இருந்து வந்­துள்­ள­தாக 'எஸ்-ஜி வென்' நிர்­வா­கக் குழுத் தலை­வர் ரேச்­சல் எங் கூறி­னார். தென்­கி­ழக்­கா­சிய, ஆசிய பசி­பிக் வட்­டா­ரங்­களில் உள்ள இதர பெண் தொழி­ல­தி­பர்­களு­டன் இணைந்து செயல்­ப­டும்­போது அனை­வ­ரும் தங்­களை மேம்­ப­டுத்­திக்­கொண்டு ஒன்­றாக வளர வாய்ப்­பு­கள் உரு­வா­க­லாம் என்று அவர் குறிப்­பிட்டார்.