மார்சிலிங் உணவங்காடி மூடப்பட்டுள்ளது

1 mins read
2f6ab9b4-725c-46e4-9bae-b28804d3502e
தற்போது மூடப்பட்டிருக்கும் மார்சிலிங் ஈரச்சந்தை, உணவங்காடி. படம்: ஷின் மின் -

மார்­சி­லிங் லேன் உண­வங்­காடி, ஈரச்­சந்தை கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­படும் குழு­ம­மாக உரு­வெ­டுத்­துள்­ளது. அத­னைத் தொடர்ந்து புளோக் 20, 21 ஆகி­ய­வற்­றில் இருக்­கும் இந்த உண­வங்­கா­டி­யும் ஈரச்­சந்­தை­யும் நேற்று மூடப்­பட்­டன.

நாளை மறு­தி­னம் வரை மூடப்­பட்­டி­ருக்­கும் என்று மார்­சி­லிங்- யூ டீ குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஸாக்கி முகம்­மது தெரி­வித்­தார்.

அப்­போது இங்கு சுத்­தி­க­ரிப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் தற்­காப்பு, மனி­த­வ­ளம் ஆகிய துறை­க­ளுக்­கான மூத்த துணை அமைச்­ச­ரு­மான திரு ஸக்கி கூறி­னார்.

ஈரச்­சந்­தை­யி­லும் உண­வங்­கா­டி­யி­லும் 52 உண­வுக் கடை­கள், 71 இறைச்­சிக் கடை­கள், 34 காய்­கறிக் கடை­கள் உள்ளிட்டவை இருப்­ப­தாக அவர் சொன்­னார்.

இங்கு கடைக்­கா­ரர்­கள், ஊழி­யர்­கள் ஆகி­யோ­ருக்­கி­டையே கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பதை அறிந்­த­தாக தேசிய சுற்­றுப்­புற அமைப்பு கூறி­யது.

'சுத்­தி­க­ரிப்­புப் பணி­கள் நேற்று மதியம் சுமார் மூன்று மணிக்­குத் தொடங்­கி­ய­தாக அமைப்பு குறிப்­பிட்­டது. இது நான்கு நாட்­களில் மூடப்­பட்­டி­ருக்­கும் மூன்­றா­வது ஈரச்­சந்தை மற்­றும் உணவகம். கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தோ பாயோ லோரோங் எட்டு ஈரச்­சந்­தை­யும் உண­வங்­கா­டி­யும் மூடப்­பட்­டன.

அதற்கு மறு­நாள் வெஸ்ட் கோஸ்ட்­டில் உள்ள ஆயர் ராஜா உண­வங்­காடி மூடப்­பட்­டது. இரண்­டும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று குழு­மங்­க­ளாக அறி­விக்­கப்­பட்டிருந்தன.