தளர்த்தப்பட்டுள்ள விதிமுறைகளை வரவேற்கும் நிறுவனங்கள்

2 mins read
8159dfd0-8b2c-4ad4-9f7f-13a27e8558fa
-

வேலை­யி­டத்­தில் யாருக்­கா­வது கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் உட­ன­டி­யாக வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­க­வேண்­டும் என்ற விதி­முறை தளர்த்­தப்­பட்­ட­தைப் பொது­வாக சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் வர­வேற்­றுள்­ளன.

தளர்த்­தப்­பட்ட விதி­மு­றை­க­ளால் வேலை­யிட செயல்­மு­றை­க­ளுக்­குப் பாதிப்பு அதிகம் வராது என்று அவை கருது­கின்­றன.

வேலை­யி­டத்­தில் ஏழு நாட்­க­ளுக்­குள் குறைந்­தது மூன்று ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் அனை­வ­ரும் உட­ன­டி­யாக 10 நாட்­க­ளுக்கு வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­க­வேண்­டும்.

இந்­தக் கால அவ­கா­சம் இதற்கு முன் 14 நாட்­க­ளாக இருந்­தது. மேலும், இதற்கு முன் வேலை­யி­டத்­தில் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 கிரு­மித்தொற்று ஏற்­பட்­டாலே இந்த விதி­முறை நடப்­புக்கு வந்­தி­ருக்­கும்.

தளர்த்­தப்­பட்ட விதி­ம­றை­கள் நேற்று நடப்­புக்கு வந்­தன. மாற்­றங்­கள் வர்த்­த­கங்­க­ளுக்கு மகிழ்ச்சி தரும் என்­றார் 'ப்ரு­டென்­ஷி­யல் சிங்­கப்­பூர்' நிறு­வ­னத்­தின் நிறு­வன விவ­கா­ரங்­கள் பிரி­வுத் தலை­வர் டான் பிங் பிங் கூறி­னார்.

விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­டி­ருப்­பது சரி­யான பாதை­யில் செல்­வ­தைக் காட்­டு­வ­தா­கச் சொன்ன செடி­கொ­டி­க­ளி­லி­ருந்து உண­வைத் தயா­ரிக்­கும் நிறு­வ­ன­மான 'கரானா'வின் துணை நிறு­வ­ன­ரான பிளே­யர் கிரிஹ்­டன் கூறி­னார்.

விதி­மு­றை­கள் எப்­படி தளர்த்­தப்­பட்­டா­லும் அது வர­வேற்­கப்­படும் என்று அவர் கூறி­னார்.

இவற்­றைப் போல் இதர சில நிறு­வ­னங்­களும் தளர்த்­தப்­பட்ட விதி­மு­றை­களை எண்ணி மகிழ்ச்­சி­ய­டை­கின்­றன.

இந்த விதி­மு­றை­கள் சரா­ச­ரி­யான வேலை­யி­டங்­க­ளுக்­குப் பொருந்­தும் என்று மனி­த­வள அமைச்சு கூறி­யுள்­ளது.

கட்­டு­மா­னத் துறை, கடற்துறை போன்றவை, அவற்றுக்கென இருக்­கும் கிருமிப் பரவல் தொடர்பிலான விதி­மு­றை­க­ளைப் பற்­றித் தெரிந்து­கொண்டு அவற்­றைப் பின்­பற்­ற­வேண்­டும் என்று அமைச்சு சொன்­னது.