கொவிட்-19 சம்பவத்தால் பிரபல உணவகம் மூடப்பட்டுள்ளது

கொவிட்-19 சம்பவத்தால் பிரபல உணவகம் மூடப்பட்டுள்ளது

1 mins read
4dc6d4cc-e5e2-48eb-b72f-179581d74327
'ஹெச்ஜேஹெச் மைமுனா' கிளைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. படம்: 'ஹெச்ஜேஹெச் மைமுனா'/ஃபேஸ்புக் -

பிர­பல 'நாசி படாங்' உணவு வகையை விற்­கும் 'ஹெச்­ஜே­ஹெச் மைமுனா' உண­வ­கம் தற்­கா­லி­கமாக அதன் கிளை­களை மூடி­யுள்­ளது. அதன் கிளை­களில் ஒன்­றில் கொவிட்-19 தொடர்­பான சம்­ப­வம் நிகழ்ந்­த­தைத் தொடர்ந்து அவ்வுணகக் கிளை­கள் மூடப்­பட்டுள்­ளன.

உண­வ­கங்­கள் மீண்­டும் திறக்­கப்­படும் நாள் குறித்து அறி­விக்­கும் வரை அவை மூடப்­பட்­டி­ருக்­கும் என்று 'ஹெச்­ஜே­ஹெச் மைமுனா' ஃபேஸ்புக்­கில் குறிப்­பிட்­டது. வாடிக்­கை­யா­ளர்­கள், ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரின் பாது­காப்­பைக் கருத்­தில்­கொண்டு 'ஹெச்­ஜே­ஹெச் மைமுனா' உண­வ­கங்­கள் நன்கு சுத்­தம் செய்­யப்­பட்டு அவற்­றில் கிருமிநாசி­னிகள் தெளிக்கப்படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

அண்­மை­யில் உண­வகங்­க­ளுக்­கு வந்தோரிடம் தங்­களின் உடல்­ந­ல­னைக் கூர்ந்து கவ­னிக்­கு­மா­றும் 'ஹெச்­ஜே­ஹெச் மைமுனா' ஃபேஸ்புக் பதி­வில் கேட்­டுக்­கொண்­டது. உணவை வாங்க முன்­ப­ணம் செலுத்­தி­ய­வர்­களுக்கு அந்­தத் தொகை திரும்­பித் தரப்­படும் என்றும் அறி­விக்­கப்­பட்­டது.

உண­வகங்­கள் தற்­கா­லி­க­மாக மூடப்­ப­டு­வ­தற்கு 'ஹெச்­ஜே­ஹெச் மைமுனா' வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்டது.