நினைவிழப்பு நோயாளிகளுக்கு புதிய இணையவாசல், செயலி

நினைவிழப்பு நோயாளிகளுக்கு புதிய இணையவாசல், செயலி

2 mins read
6d69d695-dfae-4fa3-a968-1214e557e06a
-
multi-img1 of 2

நினை­வி­ழப்பு நேயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் அவர்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­வர்­க­ளுக்­கும் ஆத­ரவு அளிக்­கும் வகை­யில் புதிய இணைய­வா­ச­லும் செய­லி­யும் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

நினை­வி­ழப்பு நோயால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்­கும் அவர்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­வர்­க­ளுக்­கும் தேவை­யான வளங்­க­ளைப் புதிய இணை­ய­

வா­சல் கொண்­டி­ருக்­கும்.

அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள செயலி, ஒரு­வ­ருக்கு நினை­வி­ழப்பு நோய் ஆரம்­ப­கட்­டத்­தில் இருக்­கும்­போதே அறி­கு­றி­களை அடை­யா­ளம் காண உத­வும்.

உலக அல்­ஸை­மர் நோய் தினத்தை முன்­னிட்டு நினை­வி­ழப்பு நோய் குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த ஒருமாதக் காலத்­துக்கு நட­வ­டிக்­கை­களும் நிகழ்ச்­சி­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன.

DementiaHub.SG இணை­ய­

வா­சலை சிங்­கப்­பூர் நினை­வி­ழப்பு நோய் சமூ­கச் சேவை அமைப்­பும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பரா­மரிப்பு முக­வை­யும் தொடங்­கி­வைத்­துள்­ளன.

சமூ­கத்­தி­னர் அல்­லது நிறு­

வ­னங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள், நினை­வி­ழப்பு நோயால் பாதிக்­கப்­பட்­டோர், நினை­வி­ழப்பு நோயால் பாதிக்­கப்­பட்­டோ­ரைப் பரா­ம­ரிப்­ப­வர்­கள்,

பரா­ம­ரிப்­புச் சேவை நிபு­ணர்­கள் ஆகிய நான்கு பிரி­வி­ன­ருக்­குத் தேவை­யான வளங்­களை இந்த இணை­ய­வா­சல் கொண்­டுள்­ளது.

நினை­வி­ழப்பு நோய்க்­கான அறி­கு­றி­க­ளைச் சமா­ளிப்­பது, பொருட்­கள் மற்­றும் ஆத­ர­வுச் சேவை­கள், சுயபரா­ம­ரிப்பு ஆகி­யவை தொடர்­பான அறிக்­கை­க­ளை­யும் நினை­வி­ழப்பு நோயா­ளி­க­ள் பரா­ம­ரிப்பு தொடர்­பான காணொ­ளி­கள், உண­வுப் பரிந்­து­ரை­கள் ஆகி­ய­வற்றை இணை­ய­வா­சல் கொண்­டுள்­ளது.

ஒரு­வ­ருக்கு நினை­வி­ழப்பு நோய் இருப்­பது தெரி­ய­வந்­த­தும் அது­

தொ­டர்­பா­கக் கூடு­தல் தக­வல்­

க­ளைப் பெற பாதிக்­கப்­பட்­டோ­ரும் அவர்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­வர்­களும் விரை­வது வழக்­கம் என்று சிங்­கப்­பூர் நினை­வி­ழப்பு சமூ­கச் சேவை அமைப்­பின் தலைமை நிர்­வாகி ஜேசன் ஃபூ தெரி­வித்­தார்.

பல்­வேறு உள்­ளூர், அனைத்­து­லக இணை­யத்­த­ளங்­களில் அவர்­கள் தக­வல்­க­ளைத் தேடு­வர் என்று அவர் கூறி­னார்.

ஆனால் சில இணை­யத்­த­ளங்­களில் உள்ள தக­வல்­கள் நம்­ப­க­மா­னவை அல்ல அல்­லது சிங்­கப்­பூர் சூழ­லுக்­குப் பொருத்­த­மா­னவை அல்ல என்று அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் 60 வய­தும் அதற்­கும் மேற்­பட்­டோ­ரில் பத்­தில் ஒரு­

வ­ருக்கு, அதா­வது ஏறத்­தாழ 86,000 பேருக்கு நினை­வி­ழப்பு நோய் இருக்­கக்­கூ­டும் என்று ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பரா­ம­ரிப்பு முக­வை­யின் தலைமை நிர்­வாகி டான் குவாங் சியேக் கூறி­னார்.

புதிய இணை­ய­வா­சல் வருங்­கா­லங்­களில் மேம்­ப­டுத்­தப்­படும் என்­றும் சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழி­க­ளி­லும் தக­வல்­கள் இடம்­பெ­றும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நினை­வி­ழப்பு நோய்க்­கான அறி­கு­றி­களை அடை­யா­ளம் கண்டு நோய் ஆரம்­ப­கட்­டத்­தில் இருக்­கும்­போதே அதைக் கண்­டு­பி­டிக்க உத­வும் செய­லியை தேசிய நரம்­பி­யல் கழ­க­மும் சிங்­ஹெல்த்­தும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளன.

ஒன்­பது மாதச் சோத­னைக்­குப் பிறகு புதிய செயலி சிங்­ஹெல்த்­தின் 'ஹெல்த் படி' கைபே­சிச் செய­லி­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.