முன்பு ஒரு காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டாக கோல்ஃப் விளங்கியது.
ஆனால் கடந்த 20 ஆண்டு
களாக இந்நிலை மாறி வருகிறது. தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) மேற்கொள்ளும் முயற்சிகளால் சாதாரண சிங்கப்பூரர்களும் கோல்ஃப் விளையாடும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
1993ஆம் ஆண்டில் ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் அரசாங்கமும் தொழிலாளர் இயக்கமும் இணைந்து அதற்கான ஏற்பாட்டைத் தொடங்கின.
சாதாரண சிங்கப்பூரர்களிடம் கோல்ஃப் விளையாட்டைக் கொண்டு செல்லும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பணக்காரர்களுக்கும் மற்றவர்
களுக்கும் இடையிலான இடை
வெளியைக் குறைக்க இந்த நட
வடிக்கை மேற்கொள்ளபட்டது.
தற்போது அதைவிட ஒருபடி மேல் சென்று கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட அனைத்து ஊழியர்களும் ஊக்குவிக்கப்படுகின்றர். அதில் அவர்கள் எளிதில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கோல்ஃப் விளையாட ஏற்படும் செலவை கட்டுப்படியானதாக்கவும் தேவையான நடவடிக்கைகளை என்டியுசி எடுத்து வருகிறது.
சிங்கப்பூரில் கோல்ஃப் விளையாட்டைப் பிரபலமாக்க சிங்கப்பூர் கோல்ஃப் சங்கம், சிங்கப்பூர் நிபுணத்துவ கோல்ஃப் ஆட்டக்காரர்கள் சங்கம் ஆகியவற்றுடன் என்டியுசி கடந்த ஜூலை மாதம் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டது.
அந்த மூன்று ஆண்டு ஒப்பந்தத்தின்படி யு கோல்ஃப் பயிற்சிக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. கோல்ஃப் விளையாட்டை ஊழியர்களும் பொதுமக்களும் கற்றுக்கொள்ள திட்டங்கள் வகுக்கப்படும்.
முதலில் தொழிற்சங்க உறுப்
பினர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
அதன் பிறகு, படிப்படியாக பொதுமக்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
பயிற்சி வகுப்புகள் ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் நடைபெறும்.
நாடெங்கும் பயிற்சி நிலையங்களை அமைக்கவும் கோல்ஃப் தொடர்பான நிகழ்வுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பங்காளித்துவம் காரணமாக வழக்கமான கட்டணங்களைவிட யு கோல்ஃப் பயிற்சிக் கழகத்தின் கட்டணம் 20 விழுக்காடு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

