சிங்கப்பூரில் பெரும்பாலான முதலாளிகள் பன்முக, சமத்துவ அடிப்
படையிலான, அனைவரையும் உள்ளடக்கும் கொள்கைகளால் கிடைக்கக்கூடிய பலன்களை அறிந்துள்ளனர்.
ஆனால், அவர்களில் 10ல் 7 முதலாளிகள் இது தொடர்பான கொள்கைகளை இன்னமும் அமல்
படுத்தவில்லை என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு 19 துறை
களைச் சேர்ந்த 186 முதலாளிகடம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் 71 விழுக்காடு முதலாளிகள் மேற்குறிப்பிட்ட பன்முக, சமத்துவ அடிப்படையிலான, அனைவரையும் உள்ளடக்கும் கொள்கைகள் நிறுவன கலாசாரத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். அத்துடன், 55 விழுக்காடு முதலாளிகள் ஊழியர் ஈடுபாட்டில் இதுபோன்ற கொள்கைகள் தாக்கத்தை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்கின்றனர்.
இந்நிலையில், 10ல் ஆறு முதலாளிகள் பணியமர்த்தல், பதவி உயர்வு போன்றவற்றில் இந்தக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளதாக ஆய்வு கூறுகிறது. எனினும், ஆண்கள், பெண்கள் இடையே நிலவும் ஊதிய ஏற்றத்தாழ்வு, வாழ்க்கைத் தொழில் முன்னேற்றம், வயது அடிப்படையிலான செயல்திறன், உடற்குறையுள்ளோர் அல்லது பராமரிப்பு தேவைப்படுவோர் எதிர்கொள்ளும் தடைகள் போன்றவை குறித்து போதுமான தரவுகள் இல்லாததைச் சுட்டியதாக ஆய்வு கோடிகாட்டியது.
வேறு பல நிறுவனங்கள், தங்களது நிறுவன பண்புநெறிகள், ஊழியர் நிர்வாகம், ஊழியர் செயல்பாடு போன்றவற்றால் இந்தக் கொள்கைகளை அமல்படுத்த முடியாத நிலை இருப்பதாகக் கூறின.
அத்துடன், சில நேரங்களில் உற்பத்திப் பிரிவு ஊழியர் மேலாளர்களால் தங்கள் ஊழியர்களை பாகுபாடு காட்டாமல் நடத்த இயலாததையும் இந்த நிறுவனங்கள் சுட்டிக் காட்டியதாக ஆய்வு கூறுகிறது. தற்போதைய நிலையில் அனைத்துலக மாதர் தின கொண்டாட்டங்கள் அவ்வளவு பலனளிக்கக்கூடியதாக இல்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.
அதற்குக் காரணம், மேற்கூறிய அனைவரையும் உள்ளடக்கும் கொள்கைகளைப் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் அமல் செய்யாததுடன் தங்கள் ஊழியர்களுடன் நீண்டகால அடிப்படையில் ஈடுபாடு கொள்ளாததே என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

