கொலைக் குற்றவாளியின் மனு நிராகரிப்பு

கொலைக் குற்றவாளியின் மனு நிராகரிப்பு

1 mins read
38e7c458-1d69-407f-8fa2-57a89e4ed44c
-

தமக்­குச் சம்­பந்­த­மில்­லாத கொலை வழக்­கில் பங்­கேற்க கொலைக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்டு மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட முன்­னாள் போலிஸ் அதி­காரி இஸ்­கந்­தர் ரஹ்­மாட் தாக்­கல் செய்த மனுவை மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் ஏற்க மறுத்­து­விட்­டது.

2017ஆம் ஆண்­டில் உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தில் உள்ள வீட்­டில் கர்ப்­ப­மாக இருந்த தமது மனை­வி­யை­யும் தமது நான்கு வயது மக­ளை­யும் கழுத்தை நெரித்­துக் கொன்ற குற்­றத்­துக்­காக 46 வயது டியோ கிம் ஹெங்­கிற்­குக் கடந்த ஆண்டு தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தீர்ப்பை எதிர்த்து டியோ மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளார்.

இதில் பங்­கெ­டுத்து அர­சி­யல் சாச­னப் பிரி­வு­க­ளின்­கீழ் உள்ள கொலைக் குற்­றம் தொடர்­பான இரண்டு சட்­டக்­ கூ­று­களை எதிர்க்­கும் டியோ­வுக்கு ஆத­ரவு வழங்க இஸ்­கந்­தர் விருப்­பம் தெரி­வித்­தார்.

இஸ்­கந்­த­ரின் விண்­ணப்­பத்தை மேல்­மு­றை­யீட்டு நிதி­மன்­றம் நிரா­

க­ரித்­துள்­ளது.

2013ஆம் ஆண்­டில் தந்தை, மகன் இரு­வ­ரைக் கொலை செய்த குற்­றத்­துக்­காக இஸ்­கந்­த­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.