நிதி திரட்ட 'சிங்கா' முறிகள் விற்பனை

2 mins read
7963840e-2b15-4297-9a12-1d6d4c85bd04
-

உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­க­ளுக்கு நிதி திரட்ட சிங்கா முறி­களை முதல்­மு­றை­யாக விற்க சிங்­கப்­

பூ­ரின் மத்­திய வங்கி திட்­ட­மிட்­டுள்­ளது.

இந்த விற்­பனை மூலம் $2.6 பில்­லி­யன் திரட்ட அது இலக்கு கொண்­டுள்­ளது.

இம்­மா­தம் நடை­பெற இருக்­கும் சிங்­கப்­பூர் அர­சாங்க உள்­கட்­ட­மைப்பு முறி­க­ளுக்­கான ஏலக்­குத்­த­கை­யில் எத்­தனை முத­லீட்­டா­ளர்­கள் கலந்­து­கொள்­ள­லாம் என்ற தக­வலை சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் அதன் இணை­யப்­

ப­கத்­தில் நேற்று பதி­விட்­டது.

ஏலக்­குத்­த­கை­யில் அமைப்­பு­களும், சில்­லறை வர்த்­தக முத­லீட்­டா­ளர்­களும் பங்­கெ­டுக்­க­லாம்.

குறைந்­த­பட்­சம் $1,000 ரொக்­கத்­து­டன் முத­லீட்­டா­ளர்­கள் ஏலக்­குத்­த­கை­யில் பங்­கெ­டுக்­க­லாம்.

டிபி­எஸ்/பிஓ­எஸ்பி, ஓசி­பிசி, யுஓபி தானி­யங்கி வங்கி இயந்­தி­ரங்­கள், இணைய வங்­கிச் சேவைத் தளங்­கள், ஓசி­பி­சி­யின் கைபேசிச் செயலி ஆகி­யவை மூலம் முறி­களை வாங்­க­லாம்.

ஆனால் முறி­களை வாங்­கு­வோ­ருக்கு தனி­ந­பர் மத்­திய வைப்­புத்­தொ­கைக் கணக்கு இருக்க வேண்­டும்.

முறி­கள் 2051ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தில் முதிர்ச்­சி­அடை­யும்.

அவற்­றின் மூலம் கிடைக்­கும் வட்டி தொடர்­பான விவ­ரங்­கள் ஏலக்­குத்­தகை முடிந்து ஒரு மணி நேரத்­தில் வெளி­யி­டப்­படும்.

சிங்கா முறி­கள் முக்­கிய உள்­கட்­ட­மைப்பு அர­சாங்­கக் கடன் சட்­டத்­தின்­கீழ் விற்­பனை செய்­யப்­படும் முதல் சிங்­கப்­பூர் அர­சாங்க முறி­க­ளா­கும்.

புதிய குறுக்­குத் தீவு, ஜூரோங் வட்­டார எம்­ஆர்டி ரயில் பாதை­கள், உயர்ந்து வரும் கட­ல்

மட்­டத்­தி­ட­மி­ருந்து சிங்­கப்­பூ­ரைப் பாது­காக்க கட்­டப்­படும் சுவர் போன்ற நீண்­ட­கால உள்­

கட்­ட­மைப்புத் திட்­டங்­க­ளுக்கு நிதி திரட்ட $90 பில்­லி­யன் வரை கடன் வாங்க அர­சாங்­கத்­துக்கு இந்­தச் சட்­டம் அனு­மதி வழங்­கு­கிறது.

கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு அளிக்க சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக அதன் கையிருப்பு நிதியைப் பயன்படுத்தியுள்ளது.

ஆதரவுத் திட்டங்களுக்காக $53.7 பில்லியன் செலவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரி விக்கப்பட்டது.