கொவிட்-19 சூழலில் அறிவார்ந்த சேவை

கொவிட்-19 சூழலில் அறிவார்ந்த சேவை

1 mins read
0c76c470-50ad-4f28-adcc-fd88d35e9f62
உணவு பரிமாறவும் சாப்பிட்டு முடித்த தட்டுகளை அகற்றவும் 'கீன்போட்' பயன்படுத்தப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொள்­ளை­நோய்ச் சூழ­லில் சேவைத் துறையை உரு­மாற்­று­வதற்கு அறி­வார்ந்த சேவை எந்­திரங்­கள் கைகொ­டுக்க உள்­ளன.

'சாஃப்ட்­பேங்க் ரோபோ­டிக்ஸ் குருப்' மற்­றும் 'கீன்­ஒன் ரோபோ­டிக்ஸ்' நிறு­வ­னத்­தின் கூட்­ட­ணி­யில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள இப்­புதிய எந்­தி­ரங்­கள், எதிர்­கால சேவைத் துறை­யின் சின்­ன­மாக விளங்­க­வுள்­ளன.

'கீன்­போட்' என்ற இக்­கு­றிப்­பிட்ட எந்­தி­ரம், உணவு விநி­யோ­கத்தை மேலும் துரி­த­மா­கச் செய்ய உத­வ­லாம் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

இதைக் கொண்டு பேரங்­காடி ஒன்­றில் 'கிராப் சிங்­கப்­பூர்' செய்த முன்­னோட்­டத்­தில், உணவு விநி­யோக நேரம் கிட்­டத்­தட்ட 5 முதல் 15 நிமி­டங்­கள் குறைக்­கப்­பட்­ட­தாக நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் திரு யீ வீ தங் கூறி­னார்.

வாடிக்­கை­யா­ளர் அனு­ப­வத்தை மேம்­ப­டுத்­தி­ய­து­டன் உணவு விநி­யோக ஓட்­டு­நர்­க­ளால் கூடு­தல் உணவை விநி­யோ­கம் செய்­ய­வும் காத்­தி­ருப்­ப­தி­லும் பேரங்­கா­டி­யில் நடப்­ப­தி­லும் செல­வி­டும் நேரத்­தைக் குறைக்­க­வும் இந்த அறி­வார்ந்த எந்­தி­ரங்­கள் வாய்ப்­ப­ளித்­துள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

அறி­வார்ந்த தேச­மாக சிங்­கப்­பூர் மாறும் இலக்­குக்கு இத்­த­கைய எந்­தி­ரத் திட்­டங்­கள் தோதாக இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.