சமூக ஊடகச் சவால்: போலிஸ் விசாரணை

சமூக ஊடகச் சவால்: போலிஸ் விசாரணை

1 mins read
ade3a11d-59a5-48d5-8cc0-78380b687a7c
-

அர­சாங்­கச் சொத்­து­க­ளைச் சேதப்­படுத்­து­மாறு சமூக ஊட­கப் பதி­வு­களில் விடுக்­கப்­பட்ட சவா­லைப் பற்றி தாங்­கள் அறிந்­தி­ருப்­ப­தாக போலி­சார் தெரி­வித்­துள்­ள­னர். 'devious licks' என்ற அச்­ச­வா­லின்­படி, பள்­ளிச் சொத்­து­களை மாண­வர்­கள் சேதப்­ப­டுத்­தி­விட்டு தாங்­கள் செய்­ததை சமூக ஊட­கத்­தில் பதி­விட வேண்­டும்.

ஆனால், அச்­ச­வால் தொடர்­பிலான இரு வேறு சம்­ப­வங்­களில் அர­சாங்­கச் சொத்­து­கள் சேதப்­படுத்­தப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூர் நில ஆணை­யம், தேசிய சுற்­றுப்­புற வாரியம் ஆகி­ய­வற்­றுக்­குச் சொந்­த­மான பெயர்ப் பல­கை­களை அகற்­றி­ய­தன் தொடர்­பில் இரண்டு இளை­யர்­கள் மீது போலி­சார் விசா­ரணை மேற்­கொண்டுள்­ள­னர்.

அனு­ம­தி­யின்றி அர­சாங்­க சொத்­து­களை அகற்­று­வது குற்­ற­மா­கும். அத்­து­டன் குற்­றச் செய­லுக்கு இட்­டுச்­செல்­லும் இது­போன்ற சமூக ஊட­கச் சவால்­களில் அங்­கம் வகிக்க வேண்­டாம் என்று போலி­சார் அறிவு­றுத்­தி­யுள்­ள­னர்.