தொடர்புத்திறன் குறைபாடு உள்ளவரை தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1 mins read
8cbd7dad-f345-4c34-bf27-2bd2b1bce189
-

தொடர்­புத்­தி­றன் குறை­பாடு, மித­மான அறி­வு­சார் குறை­பாடு, வலிப்பு நோய் ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்ட 36 வயது ஆட­வரை, பெரி­ய­வர்­களுக்­கான இல்­லப் பணி­யா­ளர் ஒரு­வர் தாக்­கி­ய­தாக நேற்று குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

குற்­றத்தை ஒப்­புக்­கொண்ட அந்த 29 வயது இந்­திய நாட்­ட­வர், பெரி­யோர்க்­கான இல்­லத்­தில் பரா­ம­ரிப்­புப் பணி­யா­ள­ராக வேலை அனு­மதிச் சீட்டு வைத்­தி­ருந்­தார். தாக்­கப்­பட்­ட­வர், 2019ஆம் ஆண்­டு­மு­தல் அந்த இல்­லத்­தில் இருந்து வந்­த­வர். அவ­ருக்கு வாரந்­தோ­றும் வீடு திரும்­ப அனுமதி அளிக்கப்­பட்­டது. 2019 முதல் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர் அந்த இல்­ல­வா­சி­யைப் பரா­ம­ரித்து வந்­தார்.

இல்­லத்­தின் நட­வ­டிக்கை மையத்­தில் இருந்த ஊழி­யரை நோக்கி வந்த இல்­ல­வாசி, அவ­ரது சட்­டைப்­பட்­டை­யைப் பிடித்­த­தா­க­வும் அதன் பின்­னர் இல்­ல­வா­சியை அந்த ஊழி­யர் தரைக்­குத் தள்­ளி­ய­தா­க­வும் அறி­யப்­ப­டு­கிறது.

அத்­து­டன் இல்­ல­வா­சி­யின் கைகளைப் பிடித்­த­வாறு தனது முழங்­கா­லை­யும் இல்­ல­வா­சி­யின் வயிற்­றின்­ மீது அழுத்­தி­னார். பின்­னர், எழுந்து நின்று இல்­ல­வா­சி­யின் வயிற்றில் மிதித்­தார். அறை நடு­வுக்கு இல்­ல­வா­சி­யைக் கையைப் பிடித்து இழுத்­த­து­டன் அவ­ரது தொடைப்­ப­கு­தி­யில் ஐந்து முறை உதைத்­தார்.

அதே நாளில் இரண்­டா­வது முறை­யும் இல்­ல­வா­சியை அந்­தப் பணி­யா­ளர் தாக்­கி­னார். மற்ற இல்­லப் பணி­யா­ளர்­கள் நடப்­பதைப் பார்த்­தும் தாக்­கு­தலை நிறுத்­த­வில்லை. தாக்­கப்­பட்ட இல்­ல­வாசி வீடு திரும்­பி­ய­போது இடுப்­பி­லி­ருந்து தொடை­வரை இருந்த காயத்தை அவ­ரின் தாயார் கவ­னித்­து­விட்­டார். இல்­லப் பணி­யா­ள­ரது தண்­டனை விதிப்பு அடுத்த மாதம் 28ஆம் தேதி­யன்று தெரி­விக்­கப்­படும்.