தீமிதித் திருவிழா: நாளை முதல் முன்பதிவு; அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேர்த்திக்கடன்கள்

தீமிதித் திருவிழா: நாளை முதல் முன்பதிவு; அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேர்த்திக்கடன்கள்

3 mins read
26d0278d-2a75-4848-95bc-43b3af1978f2
-

கி. ஜனார்த்­த­னன்

இவ்­வாண்டு தீமி­தித் திரு­விழா அடுத்த மாதம் 24ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­றும். அதன் தொடர்­பி­லான முதற்­கட்ட நேர்த்­திக் கடன்­கள் அக்­டோ­பர் 1ஆம் தேதி­யன்று தொடங்­கு­கின்­றன என்று இந்து அறக்­கட்­டளை வாரி­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

தீமி­தித் திரு­விழா தொடர்­பிலான சடங்­கு­பூர்வ நிகழ்ச்­சி­கள் கடந்த மாதம் 15ஆம் தேதி­யன்று தொடங்கி தொடர்ந்து நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன என்று கூறிய வாரி­யம், அனைத்து நிகழ்­வு­களும் அர­சாங்­கம் வகுத்­துள்ள பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களுக்­கேற்ப நடத்­தப்­ப­டு­கின்­றன என்­றும் விவ­ரித்­தது.

சமூ­கத்­தில் அதி­க­ரித்து வரும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் கார­ண­மாக, முன்பு அறி­விக்­கப்­பட்ட நிகழ்ச்­சி­களில் தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளால் மாற்­றங்­கள் ஏற்­ப­டு­மா­யின், அது மக்­க­ளின் பாது­காப்­பைக் கருத்­தில் கொண்டே செய்­யப்­பட்­ட­தாக இருக்­கும் என்­பதை பக்­தர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­ப­தை­யும் வாரி­யம் வலி­யு­றுத்­தி­யது.

நேர்த்­திக்­க­டன்­களை நிறை­வேற்ற குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான பக்­தர்­களே அனு­ம­திக்­கப்­படு­வர். தீமி­தித் திரு­விழா தொடர்­பில் வார­யி­றுதி நாட்­களில் இடம்­பெ­றும் முதற்­கட்ட நேர்த்­திக் கடன்­களி­லும் தீமி­தித்­தல் நாளன்று இடம்­பெ­றும் நேர்த்­திக்­க­டன்­க­ளி­லும் பங்­கேற்­கும் பக்­தர்­கள் கட்­டா­ய­மாக முன்­ப­திவு செய்­து­கொள்ள வேண்டும்.

இணை­யம் மூலம் முன்­ப­திவு

தீமி­தித் திரு­விழா நேர்த்­திக் கடன்­க­ளுக்­கான இணைய முன்­பதிவு இரு கட்­டங்­க­ளாக இடம்­பெ­றும். முதல்­கட்­டப் பதிவு அக்­டோ­பர் 1ஆம் தேதி தொடங்­கும்.

https://heb.org.sg/firewalking2021/ எனும் இணை­யத்­த­ளத்­தில் காலை 10 மணி முதல் இந்த முதற்­கட்ட நேர்த்­திக்கடன்­களுக்கு முன்­ப­திவு செய்­ய­லாம். தொலை­பேசி மூல­மா­கவோ ஆல­யத்­திற்கு நேரில் சென்றோ இந்த முன்­ப­திவை செய்ய முடி­யாது.

இதில் பால்­கு­டம், கும்­பி­டு­தண்­டம், அங்­கப்­பி­ர­தட்­ச­ணம் போன்ற நேர்த்­திக்கடன்­களில் பங்­கேற்க விரும்­பும் பக்­தர்­கள் முன்­ப­திவு செய்­து­கொள்­ள­லாம். அக்­டோ­பர் 23ஆம் தேதி­வரை இந்த நேர்த்­திக் கடன்­க­ளுக்­கான முன்­ப­தி­வு­க­ளைச் செய்­ய­லாம்.

முன்­ப­திவு செய்­வோர் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டி­ருக்­க­ வேண்­டும் அல்­லது 'ஏஆர்டி' சோதனை செய்­து­விட்டு வர­வேண்­டும். தீமி­தித் நாளின் நேர்த்­திக் கடன்­களுக்­கான இரண்­டாம் கட்ட முன்­ப­திவு அக்­டோ­பர் இரண்­டா­வது வாரம் தொடங்­கும்.

இணை­யத்­தில் வெற்­றி­க­ர­மாக முன்­ப­திவு செய்து கட்­ட­ணம் செலுத்­தி­ய­வர்­கள் மின்­னஞ்­ச­லை­யும் குறுஞ்­செய்­தி­யை­யும் பெறு­வர். முன்­ப­திவு செய்­யா­த­வர்­கள் கோயி­லுக்­குள் தங்­க­ளது நேர்த்­திக் கடன்­க­ளைச் செலுத்த அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்­றும் பதிவு செய்­து­கொண்ட பக்­தர் மட்­டும் கோயி­லுக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்­றும் அவ­ருக்கு துணை­யாகச் செல்ல மற்­ற­வர்­க­ளுக்கு அனு­மதி இல்லை என்­றும் வாரி­யம் கூறி­யது.

நேர்த்­திக்­க­டன் செலுத்­து­வ­தற்­கான கால அட்­ட­வணை, அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள பக்­தர்­க­ளின் எண்­ணிக்கை, அர­சாங்க அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து பெறப்­படும் ஆக அண்­மைய கொவிட்-19 பாது­காப்பு ஆலோ­ச­னை­யின்­படி மாற்­றப்­படும் என்று வாரி­யம் தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, கிரு­மித்­தொற்­றின் கார­ண­மாக சூழ்­நி­லை­யைப் புரிந்­து­கொண்டு விதி­மு­றை­களை மதித்து நடக்­கும்­படி இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி த. ராஜ­சே­கர் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில் மட்­டும்­தான் பக்­தர்­களை அனு­மதிக்க முடி­யும். முன்­ப­தி­வின்றி எவ­ரை­யும் அனு­ம­திக்க முடி­யாது. நேர்த்­திக் கடன்­க­ளைச் செலுத்­தும்­போது முகக்­க­வ­சத்தை அவ­சி­யம் அணிந்­து­கொண்டு செய்­ய­ வேண்­டும்," என்று அவர் கூறி­னார். வேண்­டு­த­லுக்­காக உடலை நனைக்­கும் வச­தி­யும் இவ்­வாண்டு இருக்­காது என்­றும் அவர் கூறி­னார்.

தீமிதி தொடர்பான முக்கிய சடங்குகள் இந்து அறக்கட்டளை வாரியத்தின் யூடியூப் ஒளிவழியின் மூலமாகவும் அதன் ஃபேஸ்புக் தளம் மூலமாகவும் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.