'செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞர்களுக்கு மாற்று ஆகாது'

'செயற்கை நுண்ணறிவு வழக்கறிஞர்களுக்கு மாற்று ஆகாது'

1 mins read
740e30c2-11c0-4f1a-9c83-544eefeaa411
-

சட்­டப் பணி­களில் தொழில்­நுட்­பப் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­கிறது. இதன் விளை­வாக காலப்­போக்­கில் வழக்­க­றி­ஞர்­க­ளின் சேவை தேவை­யில்­லா­மல் போய்­வி­டுமோ என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

இந்­தக் கேள்­விக்கு நேற்று நிகழ்ந்த வரு­டாந்­திர சட்­டத் தொழில்­நுட்ப மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசிய  சட்ட    பதி­ல­ளித்­துள்­ளார்.

தொழில்­நுட்­பம் வழக்­க­றி­ஞர்­கள் அதிக ஆற்­ற­லு­டன் செயல்­ப­ட­வும் சிறந்த சேவையை வழங்­க­வும் உதவு­கிறது என அமைச்­சர் கூறி­னார். குறிப்­பா­கக் கணக்­கி­ய­லில் அதி­க­மாக உத­வும் என்று அவர் கூறி­னார்.

ஆனால் 'ஆர்­டி­ஃபி­ஷி­யல் இன்­ட­லி­ஜென்ஸ்' எனப்­படும் செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பம், வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு மாற்­றாக ஒரு­போ­தும் செயல்­பட முடி­யாது," என்­றார் அமைச்­சர்.

செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்ப உத­வி­யு­டன் அடிப்­ப­டைச் சேவை வழங்க முடிந்­தா­லும் அத­னால் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மேம்­பட்ட தேவையை வழங்க முடி­யாது. அத்­து­டன் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் வழக்­கு­களில் சிறந்த அணு­கு­மு­றை­யை­யும் வகுக்க முடி­யாது என்­றும் அமைச்­சர் விளக்­கி­னார். இவ்­வாண்­டின் சட்ட, தொழில்­நுட்ப மாநாடு 'டெக்­லா­ஃபெஸ்ட்' எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டம் விரை­வில் வழக்­க­றி­ஞர்­கள் வாடிக்­கை­யா­ளர்­களை மெய்­நி­கர் மூலம் தொடர்­பு­கொள்ள வழி­வ­குக்­கும். இத்­திட்­டம் சட்ட தொழில்­நுட்­பத் தளத்­து­டன் அடுத்த ஆண்­டின் முன் பகு­தி­யில் தொடங்­க­வி­ருக்­கிறது.