சிங்போஸ்ட் கிளைகளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள கட்டணமில்லை

சிங்போஸ்ட் கிளைகளில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள கட்டணமில்லை

2 mins read
97432cb7-3548-4d9f-b69a-3c33a4998270
-

சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் கட­வுச்­சீட்டு (பாஸ்­போர்ட்) அல்­லது அடை­யாள அட்­டையை (ஐசி) அக்­டோ­பர் 1ஆம் தேதி முதல் 'சிங்­போஸ்ட்' அஞ்­சல் நிலை­யக் கிளை­களில் பெற்­றுக்­கொள்ள கட்­ட­ணம் செலுத்­தத் தேவை­யில்லை.

கட­வுச்­சீட்டு, அடை­யாள அட்­டையை அஞ்­ச­ல­கங்­களில் பெற்­றுக்­கொள்­வதை எளி­தாக்­கும் வகை­யில், அதற்­கான செலவை குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் ஏற்­றுக்­கொள்­வ­தாக நேற்று தெரி­வித்­தது.

"அஞ்­சல் நிலை­யங்­களில் புதுப்­பிக்­கப்­படும் கட­வுச்­சீட்­டு­கள், அடை­யாள அட்­டை­கள் ஆகி­ய­வற்­றைப் பெறு­வதை ஊக்­கு­விக்­கும் இந்த முயற்சி, பய­னா­ளர்­க­ளுக்கு அதிக வச­தியை வழங்­கும் ஆணை­யத்­தின் உரு­மாற்­றத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யா­கும்," என்று ஆணை­யத்­தின் குடி­மக்­கள் சேவை மையத்­தின் இயக்­கு­நர், மூத்த உதவி ஆணை­யர் டோமி­னிக் சுவா நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

தங்­கள் ஆவ­ணங்­க­ளைப் பெற, பொது­மக்­கள் தீவெங்­கும் உள்ள 27 அஞ்­சல் நிலை­யங்­களில் ஒன்­றைத் தேர்வு செய்­ய­லாம்.

தற்­போது, ​​சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் தங்­கள் கட­வுச்­சீட்டு அல்­லது அடை­யாள அட்­டையை அஞ்­சல் நிலை­யத்­தில் பெற $6 முதல் $12 வரை கட்­ட­ணம் செலுத்த வேண்­டும்.

குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யத்­து­ட­னான தொடர்­பு­களில் அங்க அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்த முடி­யாத நிலை­யில் உள்­ள­வர்­கள், ஆணை­யத்­துக்கு நேர­டி­யா­கச் சென்று தங்­கள் ஆவ­ணங்­க­ளைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டும்.

ஆவ­ணங்­கள் தயா­ரா­ன­தும் அவற்­றைப் பெறு­வ­தற்­கான தேர்­வு­கள் குறித்து விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­படும்.

தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூ­ரர்­கள், தாங்­கள் தேர்வு செய்­யும் அஞ்­சல் நிலை­யத்­தில் ஆவ­ணங்­க­ளைப் பெற https://eservices.ica.gov.sg/ibook/index.do என்ற இணை­யத்­த­ளத்­தில் முன்­ப­தி­வு­செய்­திட வேண்­டும்.

கட­வுச்­சீட்­டு­களை அடிக்­கடி மாற்ற வேண்­டிய தேவை­யைக் குறைக்­கும் நோக்­கில், அக்­டோ­பர் 1 முதல் விண்­ணப்­பிக்­கும் 16 வயது மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு சிங்­கப்­பூர் கட­வுச்­சீட்­டு­க­ளின் செல்­லு­ப­டி­யா­கும் காலம் 10 ஆண்­டு­க­ளாக அதி­க­ரிக்­கப்­படும் என்று மே மாதத்­தில் ஆணை­யம் அறி­வித்­தது.