சிங்கப்பூரின் முதல் மின் படகுச் சேவைகள் வரும் 2023இல் தொடங்கப்படும். ஷெல் நிறுவனம் அதனை நடத்தும்.
நிறுவனத்தின் ஊழியர்களை சிங்கப்பூர் தீவுக்கும் புலாவ் புக்கோம் தீவுக்கும் இடையே கொண்டு செல்ல அது பயன்படுத்தப்படும்.
குறைந்தது மூன்று மின்படகுகளை வடிவடிமைத்து, கட்டித்தந்து, இயக்குவதற்கான குத்தகையை, அத்துறையைச் சேர்ந்த சிங்கப்பூர் நிறுவனமான பெங்குவின் இன்டர்நேஷனலுக்கு ஷெல் நிறுவனம் அளித்துள்ளது.
ஷெல் நேற்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் இதைத் தெரிவித்தது.
ஓரே அடுக்கு கொண்ட இந்த மின்படகுகளில் 200 பேர் அமர வசதி இருக்கும்.
புலாவ் புக்கோம் தீவில் ஷெல் நிறுவனத்தின் எரிசக்தி ரசாயனப் பூங்கா ஊழியர்களை மின்படகுகள் ஏற்றிச்செல்லும்.
ஊழியர்களை ஏற்றிச் செல்ல தற்போது டீசலில் இயங்கும் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், மின்படகுகள் 1.2 மெகாவாட்எச் அளவுகொண்ட லித்தியம் மின்கலத்தால் இயக்கப்படும்.
ஒரு மணி நேரத்துக்கு 37 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய படகுகள் கரியமிலத்தை வெளியேற்றாது. அவை சத்தமும் இடாது.
புலாவ் புக்கோம் தீவின் ஷெல் வளாகத்தில் நிறுத்தப்படும்போது, அவற்றில் துரித முறையில் மின்சக்தி ஏற்றப்படும்.
திட்டத்துக்கான செலவைத் தெரிவிக்க ஷெல் நிறுவனம் மறுத்துவிட்டது.
ஆனால் இதே அளவுகொண்ட மின்படகுகளைத் தயாரிக்கும் தாய்லாந்து திட்டத்தில் ஒரு மின்படகைத் தயாரிக்கும் $2 மில்லியன் ஆகும் என்று கூறப்பட்டது.
இது டீசல் படகுகளுக்கு ஆகும் செலவைவிட முன்றில் இரண்டு பங்கு அதிகமாகும்.