வீட்டில் குணமடைதல்: சுகாதார அமைச்சு விளக்கம்

3 mins read
65d95e0a-0e55-44ea-9472-2ca3093e8a66
-

கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்கு மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் சமூ­கப் பரா­ம­ரிப்பு இல்லங்­க­ளுக்­கும் ஏற்­படும் நெருக்­க­டியை குறைப்­ப­தற்கே வீட்­டில் இருந்து குண­ம­டை­யும் முறை­தான் வீட்­டில் குண­ம­டை­வது.

அன்­றா­டம் பாதிக்­கப்­ப­டு­வோ­ரில் 40 விழுக்­காட்­டி­னர் வீட்­டில் இருந்து குண­ம­டைய முடி­யும். இருப்­பி­னும் 70 வய­துக்­கும் அதற்கு மேற்­பட்ட வய­தி­னர், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள், நோய்­வாய்ப்­பட்­டி­ருப்­போர் ஆகி­யோர் வழக்­கம்­போல் மருத்­து­வ­ம­னை­கள், பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். வீட்­டில் குண­ம­டை­யும் முறை குறித்து எழுந்­துள்ள சந்­தே­கங்­க­ளைத் தீர்க்­கும் வகை­யில் சில கேள்­வி­க­ளுக்கு சுகா­தார அமைச்சு நேற்று பதில் அளித்­தது.

தகு­தி­பெ­று­வோர்

வீட்­டில் குண­ம­டை­யும் முறைக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 12 வயது முதல் 69 வய­துள்­ள­வர்­கள் தகுதி பெறு­வர்.

தொற்­றுக்­கான இலே­சான அறி­கு­றி­கள் அல்­லது எவ்­வித அறி­குறி­யும் இல்­லா­த­வர்­கள். கடு­மை­யான நோயால் பாதிக்­கப்­ப­டா­த­வர்­கள். குடும்ப உறுப்­பி­னர்­களில் 80 வயதுக்கு மேற்­பட்ட அல்­லது கர்ப்­பி­ணிப் பெண்­கள் அல்­லது எளி­தில் நோய்த் தொற்­றக்­கூ­டிய ஆபத்து உள்­ள­வர்­கள், நோய்­வாய்ப்­பட்­டி­ருப்­ப­வர்­கள் ஆகி­யோரை உங்­கள் குடும்­பம் கொண்­டி­ருக்­கக்­கூ­டாது.

தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு ஏற்புடைய வகை­யில் கழி­வ­றை­யு­டன் கூடிய அறை­யைக் கொண்­டி­ருக்க வேண்­டும்.

பிசி­ஆர் சோத­னைக்­குப் பின்

பிசி­ஆர் பரி­சோ­த­னை­யில் கொவிட்-19 தொற்று இருப்­பது உறுதி ­செய்­யப்­பட்­டும் வீட்­டில் குண­ம­டை­யும் முறை­யில் ஈடு­ப­டு­வ­தற்கோ அல்­லது பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் குண­ம­டை­வ­தற்கோ தக­வல் கிடைப்­ப­தில் தாம­தம் ஏற்­ப­டு­வ­தற்கு தொற்று அதி­க­ரிப்பே கார­ணம்.

காத்­தி­ருப்பு நேரம்

இது­போன்ற காத்­தி­ருப்பு நேரங்­களில் நீங்­கள் உங்­களை உங்­கள் வீட்­டில் கழி­வறை உள்ள ஓர் அறை­யில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டும். அந்த அறையை விட்டு வெளி­யில் வரும்­போது முகக்­க­வ­சம் அணிந்­து­கொள்­ளுங்­கள்.

வீட்­டில் குண­ம­டை­யும் முறை­யைக் கடைப்­பி­டிப்­ப­வர்­கள் அந்த சம­யத்­தில் எவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்­டும் என்­பது குறித்த குறுந்­த­க­வல்­க­ள் பெறு­வார்­கள்.

அப்­போது உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டால் தொலை­பேசி மூலம் மருந்துச்­சேவை வழங்­கு­வோரை தொடர்பு­கொள்­ள­லாம். அல்­லது https://go.gov.sg/telemedicineproviders இந்த இணை­யத்தளத்­திற்­குச் சென்று மேல் விவ­ரங்­க­ளைப் பெற­லாம்.

தனி­மைப்­ப­டுத்­த­லுக்கு பதிவு செய்ய

தொற்று பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்ப உறுப்­பி­னர்­களும் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு https://go.gov.sg/quarantinereg இந்த இணை­யத் தளத்­தில் தங்­க­ளைப் பதி­வு­செய்து கொள்­ள­வேண்­டும். பதி­வு­செய்த பின்­னர் அவர்­க­ளுக்கு மின் தனி­மைப்­ப­டுத்­தல் ஆணை விதிக்­கப்­படும். அதன்­படி அவர்­கள் 10 நாட்­க­ளுக்கு தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.

இல்­லப் பரா­ம­ரிப்­புப் பொட்­ட­லம்

ஆக்­ஸி­மீட்­டர் இல்­லா­த­வர்­களுக்கு மட்­டும் இந்த இல்­லப் பரா­ம­ரிப்­புப் பொட்­ட­லாம் அனுப்பி வைக்­கப்­படும். சுகா­தார அமைச்சு இந்­தப் பொட்­ட­லத்தை, தொடர்­பில்­லாத பாது­காப்­பான முறை­யில் உங்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கும்.

அத்­தி­யா­வ­சிய பொருட்­கள்

சமை­ய­லுக்­குத் தேவை­யான மளி­கைப் பொருட்­கள், உணவு உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­களை இணை­யம் வழி பெறு­வ­தற்கு வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள். அதே­போல் மருந்­து­களை வாங்­கு­வ­தற்­கும் டெலி­மெ­டி­சின் சேவை­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டும். மருந்து தேவைப்­பட்­டால் அந்­தச் சேவை மூலம் அவர்­க­ளுக்கு மருந்து அனுப்பி வைக்­கப்­படும்.

பரி­சோ­த­னைக் கருவி

பரி­சோ­த­னைக் கரு­வி­கள் முடிந்து­விட்­டால் அது­பற்றி கவலை வேண்­டாம். ஏனெ­னில் இல்­லத்­தில் குண­ம­டை­யும் முறை­யைக் கடைப்­பி­டிப்­ப­வர்­கள் இது­போன்ற பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டி­ய­தில்லை.

அறி­குறி தென்­பட்­டால்

காய்ச்­சல், மூச்­சுத் திண­றல், இரு­மல், தொண்டை வலி, மூக்கு ஒழு­கு­தல், தலை­வலி, தசை வலி, சோர்வு, வயிற்­றுப்­போக்கு ஆகி­ய அறி­குறி ஏற்­பட்­டால், டெலி­மெ­டி­சின் சேவை வழங்­கு­வோ­ரைத் தொடர்­பு­கொள்­ள­வேண்­டும்.

குண­ம­டைந்த பின்

இல்­லத்­தில் குண­ம­டை­யும் முறை­யைக் கடைப்­பி­டித்து குண­மடை­வோ­ருக்கு குண­ம­டைந்­த­தற்­கான சான்­றி­தழ் எது­வும் தேவை­யில்லை. பாதிக்­கப்­பட்­ட­வர் நல­மாக உணர்ந்­தால், 10வது நாள் தங்­க­ளைக் தனி­மைப்­ப­டுத்­த­லில் இருந்து விடு­வித்­துக்­கொள்­ள­லாம். அப்­போது பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்­ளத் தேவை­யில்லை.