சமூகப் பராமரிப்புத் துறையில் புது வாழ்க்கைத் தொழில் வாய்ப்புகள்

சமூகப் பராமரிப்புத் துறையில் புது வாழ்க்கைத் தொழில் வாய்ப்புகள்

2 mins read
91d3a10b-cefe-46cc-abef-d35b2a08dec1
'ரென் சி' மருத்­து­வ­ம­னை­யில் பணிபுரி­யும் திரு இல்யா ஹைதர் ஸுல்கெல்பி (இடது). படம்: 'ரென் சி' மருத்துவமனை -

திரு இல்யா ஹைதர் ஸுல்­கெல்பிக்கு 14 வய­தி­ருந்­த­போது தமது கழுத்­தில் ஒரு கட்டி வளர்­வதை அறிந்­தார்.

அது மூன்­றாம் கட்ட புற்­று­நோய் என்­பது தெரி­ய­வந்­தது. அதையடுத்து ஒரு மாதத்­திற்­கும் மேலாக அவர் தீவிர கீமோ­தெ­ரபி, ரேடி­யோ­தெ­ரபி சிகிச்­சை­க­ளைப் பெற்­றார்.

உயர்­நிலை இரண்­டாம் வகுப்பு மாண­வ­ராக இருந்த திரு இல்­யா­வுக்கு முழு­மை­யாக குண­ம­டைய மூன்று மாதங்­கள் ஆகின.

ஆயி­னும், தாம் நோய்­வாய்ப்­பட்டிருந்­த­போது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் தம்­மைப் கவ­னித்­துக்­கொண்ட விதம், திரு இல்­யா­வின் மனத்­தில் பசு­ம­ரத்­தா­ணி­போல் பதிந்­தது.

இதன் விளை­வா­கச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்புப் பணி­கள் மன உளைச்­சல் ஏற்­ப­டுத்­தி­னா­லும் அதி­லி­ருந்து மிகுந்த மனநிறை­வைப் பெற­லாம் என்­பதை இல்யா புரிந்­து­கொண்­டார்.

இதற்கு முன்பு உணவு விநி­யோ­கம், படப்­பி­டிப்பு ஆகிய துறை­களில் பணி­யாற்­றிய இல்யா, தமது வாழ்க்­கைத்தொழில் மாற்றத்­தைத் தமது தாயார் ஊக்­கு­வித்­த­தா­கக் கூறி­னார். மேலும், தாம் கற்­றுக்­கொள்­வ­தைத் தமது குடும்­பத்­தி­ன­ருக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் தம்­மால் கற்­றுக்­கொ­டுக்­க ­மு­டி­யும் என்­றும் தமது தாயா­ருக்கு வய­தா­கும்­போது அவ­ருக்கு ஏது­வான முறை­யில் அவரை எவ்­வாறு பரா­ம­ரிக்­க­லாம் என்­பதை தாம் கற்­றுக்­கொள்ள விரும்­பு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

30 வய­தா­கிய இல்யா 'ரென் சி' மருத்­து­வ­ம­னை­யில் கடந்த மார்ச் மாதம் தனது பணியைத் தொடங்கினார்.

ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்பு அமைப்பு சென்ற ஆண்டு வேலை மறு­வ­டி­வ­மைப்­புத் திட்­டத்­தைத் தொடங்­கி­யது.

அத்­திட்­டத்­தின் கீழ் நடுத்­தர வயது வாழ்க்­கைத் தொழில் மாற்­றம் செய்து சமூ­கப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் பணியை ஏற்­றுக்­கொண்­ட­வர்­களில் திரு இல்­யா­வும் ஒரு­வர்.

இத்­திட்­டத்­தின் வெற்­றியை அடுத்து, மேலும் பல சமூக பரா­மரிப்பு அமைப்­பு­கள் இத்­திட்­டத்­தில் சேர்ந்­து­கொள்ள அழைக்­கப்­படும் என சுகா­தார, மனி­த­வள       , நேற்று மெய்­நி­கர் வாயி லாக நிகழ்ந்த சுகா­தார பரா­ம­ரிப்பு மனி­த­வள வளர்ச்சி விருது நிகழ்ச்சியில் தெரி­வித்­தார்.