பத்து பேருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக சந்தேகம்

பத்து பேருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக சந்தேகம்

1 mins read
8630bf37-b85f-4c9a-85e7-c7f1c7baef91
-

சிங்­கப்­பூ­ரில் ஃபைசர், மொடர்னா கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 10 பேருக்கு மூளை­யில் ரத்த உறைவு ஏற்­பட்­டுள்­ள­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. அரி­தாக ஏற்­படும் இந்த ரத்த உறைவு, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டா­லும் போட்­டுக்­கொள்­ளா­விட்­டா­லும் மூளை­யின் நரம்­பு­களில் இயற்­கை­யாக ஏற்­ப­டக்­கூ­டிய ஒன்று. பரம்பரையாக ரத்த உறை­வுக் கோளாறு இருப்­பது, தலை­யில் பலத்த அடி­ப­டு­வது, கருத்­தடை மருந்­து­கள் உட்­கொள்­வது, ஹார்­மோன் மாற்றுச் சிகிச்­சை மருந்து உட்கொள்ளுதல் போன்றவற்றால் ரத்த உறைவு ஏற்படலாம்.

ரத்த உறைவு 100,000 மக்­க­ளி­டையே 1.3லிருந்து 2 பேருக்­குக் கடந்த ஆண்­டு­களில் ஏற்­பட்­டி­ருக்­கிறது என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் அதன் கொவிட்-19 பாது­காப்பு தக­வ­லில் தெரி­வித்­தது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால் மூளை­யில் ரத்­த உறைவு ஏற்­பட்­டுள்­ள­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­வோ­ரில் எவ­ருக்­கும் உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­ட­வில்லை என்­ப­தை­யும் ஆணை­யம் குறிப்­பிட்­டது. மேலும் ரத்­த உறைவு ஏற்­ப­டு­வ­தற்­கும் மொடர்னா தடுப்­பூசி போட்­டுக்­கொண்டதற்கும் தொடர்­புள்­ளதை உறுதிப்படுத்த இய­லாது என்­றும் ஆணை­யம் கூறி­யது. இது தொடர்­பான நிகழ்­வு­களை ஆணை­யம் உன்­னிப்­பா­கக் கண்­கா­ணித்து வரு­கிறது. அது­மட்­டு­மின்றி மொடர்னா தடுப்­­பூசி போட்­டுக்­கொள்­வ­தால் ரத்த உறைவு ஏற்­படும் அபா­யம் உள்­ள­தாக இதுவரை உறுதிப்படுத்த வில்லை. இருப்­பி­னும் உள்­ளூர் சுகாதாரத் துறை நிபு­ணர்­களு­டன் இது குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வரு­வ­தா­கவும் ஆணை­யம் கூறியது.