ஓட்டுநர்களுக்கு பூஸ்டர் தடுப்பூ சி போடுவது குறித்து பேச்சுவார்த்தை

ஓட்டுநர்களுக்கு பூஸ்டர் தடுப்பூ சி போடுவது குறித்து பேச்சுவார்த்தை

2 mins read
5d93450c-c6d6-41a7-af87-6ee4faf0dc9b
-

பொதுப்­ பே­ருந்து ஓட்­டு­நர்­க­ளுக்கு பூஸ்­டர் தடுப்­பூசி போடு­வது குறித்து தேசிய போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­கள் சங்­க­மும் நிலப் போக்கு­வ­ரத்து ஆணை­ய­மும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மெல்­வின் யோங் நேற்று தெரி­வித்­தார்.

பேருந்து ஓட்­டு­நர்­களில் பலர், இந்த ஆண்­டின் முதல் காலாண்­டில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் என்று அவர் கூறி­னார்.

இந்­நி­லை­யில், பேருந்து ஓட்­டு­நர்­கள் அதி­க­ள­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தன் மூலம் கிருமி பெரிய அள­வில் பர­வு­வ­தைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம் என்று அவர் நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.

அண்­மை­யில் எட்டு பேருந்து நிலை­யங்­க­ளு­டன் தொடர்­புள்ள கொவிட்-19 தொற்று அடை­யா­ளம் காணப்­பட்­டன. அத­னை­ய­டுத்து முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளான பேருந்து ஓட்­டு­நர்­கள் அனை­வ­ருக்­கும் பூஸ்­டர் தடுப்­பூசி போடு­வ­தன் அவ­சி­யம் குறித்து தேசிய போக்கு­வ­ரத்து ஊழி­யர்­கள் சங்­க­மும் நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்­றன என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மிகப்­பெ­ரிய தொற்­றுக்­ கு­ழு­ம­மாக தோ பாயோ பேருந்து நிலை­யம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அறி­விக்­கப்­பட்­டது. அத்­து­டன் திங்­கட்­கி­ழமை வரை 254 தொற்­று­கள் பதி­வா­கி­யுள்­ளன.

தொற்­று பா­திப்­புக்கு ஆளாகி, சிகிச்­சைக்­குப் பின்­னர் முழு­மை­யா­கக் குண­ம­டைந்து இந்த வாரம் மீண்­டும் பணிக்­குத் திரும்­பிய பேருந்து ஓட்­டு­நர்­கள் சிலரை திரு யோங் சந்­தித்­துப் பேசி­ய­தா­க­வும், மேலும் ஓட்டுநர்கள் பலர் குணமடைந்து பணிக்குத் திரும்புவதாகவும் கூறினார்.

எனவே, பேருந்­து­ நி­லை­யங்­களில் இருந்­து­வந்த மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை சற்று மேம்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான பாது­காப்பு இடை­வெளி உள்­ளிட்ட கட்­டுப்­பா­டு­கள் கடை­ப்பி­டிக்­கப்­ப­டு­வது உறு­தி­ செய்­யப்­பட்­டால் நிச்­ச­யம் பேருந்து நிலை­யங்­களில் ஓட்­டு­நர்­கள் பாது­காப்­பாக பணி­யைத் தொடர்­வர்.

முத்­த­ரப்­பு­ கூட்டு முயற்சி­யால் பணி­யி­டங்­களில் வழக்­க­மான தொற்று பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு தொற்­றுப் பாதிப்பை தொடக்­கத்­தி­லேயே கண்­ட­றிந்து தனி­மைப்­ப­டுத்தி தொற்று பல­ருக்­கும் பர­வா­மல் தடுக்­க­லாம் என்று திரு இயோங் அறி­வு­றுத்­தி­னார்.

பேருந்து ஓட்­டு­நர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­ய­போது, அவர்­கள் தொற்­று பாதிப்பு கண்­ட­றி­வ­தற்கு முன்­னர், சிலர் தங்­க­ளுக்கு இலே­சான அறி­கு­றி­யி­ருந்­த­தா­க­வும் சிலர் எவ்­வித அறி­கு­றி­யுமே இல்­லை­யெ­ன­வும் தெரி­வித்­த­தா­கக் கூறி­னார்.

பேருந்து நிலை­யங்­கள் தொற்­றுக் குழு­ம­மாக அடை­யா­ளம் காணப்­பட்­ட­தை­ய­டுத்து பய­ணி­கள், பேருந்­துக்­காக நீண்ட நேரம் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது.

இந்நிலையில், தொற்­று பர­வ­லால் 'கோ-அஹெட் சிங்­கப்­பூர்' பேருந்து நிறு­வ­னம் செப்­டம்­பர் 15ஆம் தேதி, தனது ஐந்து சேவை­களை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைத்­தது. இதுபோன்று பேருந்துச் சேவைகள் குறைக்கப்பட்டதால் பேருந்துக்கான காத்திருப்பு நேரமும் கூடியது.

இருப்பினும், பயணிகள் பேருந்­துக்­காக நீண்டநேரம் காத்­தி­ருந்­தா­லும், இப்­போ­துள்ள சூழ்­நி­லை­யைப் புரிந்­து­கொண்டு ஓட்­டு­நர்­களின் சேவை­யைப் பாராட்­டத் தவ­ற­வில்லை என்று ஓட்­டு­நர்­கள் சிலர் தம்­மி­டம் கூறி­ய­தாக திரு இயோங் தெரி­வித்­தார். மேலும், அவர் முன்­களப் பணி­யா­ளர்­க­ளான பேருந்து ஓட்­டு­நர்­க­ளுக்­குப் பொது­மக்­க­ளின் ஆத­ரவு மிக­வும் முக்­கி­யம்.

அந்த வகையில், தொற்று நோய்க்கு எதி­ரா­கப் போரா­டி­வ­ரும் சவால்­மிக்க இந்­தக் கால கட்­டத்­தில், சூழ்­நி­லையை நன்கு புரிந்­து­கொண்டு பொறு­மை­காக்­கும் அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­விப்­ப­தாக திரு இயோங் கூறி­னார்.