தம்பதியருக்கு மேலும் உதவி

தம்பதியருக்கு மேலும் உதவி

2 mins read
d2443224-01de-4770-adce-35dcdad3e717
குடும்ப வன்செயல்களுக்கு அதிகம் ஆளாகக்கூடிய ஆபத்தில் உள்ள இளம் தம்பதியருக்குத் திருமண ஆயத்த செயல் திட்டங்களுக்கான மாற்றங்களை சிறப்புப் பணிக்குழு பரிந்துரைத்து உள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

குடும்ப வன்செயல் பணிக்குழு பரிந்துரை; திருமண ஆயத்த செயல்திட்டங்கள் மேம்பாடு

குடும்ப பிரச்­சி­னை­க­ளைச் சிறந்த முறை­யில் கையாளுவதற்­குத் தோதாக மேம்­பட்ட திரு­மண ஆயத்த செயல்­திட்­டங்­கள் நடப்­புக்கு வரு­கின்­றன.

திரு­மண வாழ்­வில் பல தடை­களை எதிர்­நோக்­கும் தம்­ப­தி­களுக்கு அத்திட்டங்கள் மூலம் மேலும் அதிக உத­வி­கள் கிடைக்­க­வி­ருக்­கின்­றன.

21 வயதை எட்­டாத நிலை­யில் திரு­ம­ணம் செய்துகொண்டு குழந்தை­க­ளைப் பெற்றுக்கொண்டு உள்ள தம்­பதிகளுக்­கும் அந்த உதவி­கள் கிடைக்­கும்.

குடும்ப வன்­செ­யல் பற்­றிய சிறப்­புப் பணிக்­குழு நேற்று தன்­னு­டைய பரிந்­துரை அறிக்­கையை வெளி யிட்­டது. குடும்ப வன்­செ­யல்­க­ளுக்கு அதி­கம் ஆளா­கக்­கூ­டிய ஆபத்து உள்ள இளம் தம்­ப­தி­ய­ருக்­கான திரு­மண ஆயத்த செயல்­திட்­டங்­களில் பல மாற்­றங்­களை அந்­தக் குழு பரிந்­து­ரைத்து இருக்­கிறது.

இது பற்றி ஊட­கத்­திற்கு விளக்­கம் அளித்த சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெலிங், முன்­ன­தா­கவே திரு­ம­ணம் செய்­து­கொள்­கிற, அவ்­வ­ள­வாக வசதி இல்­லாத தம்­ப­தி­கள் அதிக பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கிறார்­கள் என்­பது ஆய்வு மூலம் தெரி­ய­வந்து இருப்­ப­தா­கக் கூறி­னார். அவர்­கள் இத்­த­கைய திரு­மண ஆயத்த செயல்­திட்­டங்­களில் கலந்து­கொள்ள வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

திருமண ஆயத்த செயல்திட்டம் திருத்தப்பட்டு இருக்கிறது என்று அந்தப் பணிக்குழு அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.

சிறார் பருவ கசப்பான அனு­பவங்­கள், அவற்­றின் விளை­வாக உறவு­களில் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கங்­கள், தங்­கள் உறவு பற்றி தம்­ப­தி­யர் செய்­யும் மதிப்­பீடு, திரு­மண வாழ்­வில் தம்­ப­தி­ய­ருக்கு ஆத­ரவு அளிக்க மேலும் வளங்­கள் போன்ற பல­வும் மேம்­பட்ட செயல்­திட்­டத்­தில் இடம்­பெற்று இருக்­கின்­றன.

அமைச்­சின் குடும்ப வன்­செ­ய­லுக்கு எதி­ரான 'மௌனத்தை களை­யுங்­கள்' என்ற பொது விழிப்­பு­ணர்வு இயக்­கத்­தை­க் காலத்­திற்­கேற்ப மாற்­ற­வேண்­டும் என்­றும் குழு பரிந்­து­ரைத்து இருக்­கிறது.