கொடுமைப்படுத்துவோருக்கு மறுவாழ்வு பயிற்சி கட்டாயமாகலாம்

கொடுமைப்படுத்துவோருக்கு மறுவாழ்வு பயிற்சி கட்டாயமாகலாம்

2 mins read
07bb140a-54d9-45ab-9667-3c57ffdefc88
-

குடும்ப வன்­செ­ய­லில் ஈடு­பட்டு கொடு­மைப்­ப­டுத்­து­வோர் மறு­வாழ்வு பயிற்­சிக்­குச் செல்­ல­ வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் புதிய சட்­டங்­களைச் சிறப்­புப் பணிக்­குழு பரிந்­து­ரைத்து இருக்­கிறது.

தங்­கள் அன்­பரைக் கொடு­மைப்­படுத்­து­வோர் ஆலோ­சனை வழங்கப்படும் வகுப்பு­களில் கலந்து­கொள்ளவேண்­டும் என்று கேட்டுக்­கொள்­ளப்­ப­டு­கிறார்­கள்.

ஆனால் அவர்­களில் ஏறத்­தாழ 10 விழுக்­காட்­டி­னர் அப்­படிச் செய்­வ­தில்லை.

எனினும் விரை­வில் இதை அவர்­கள் செய்தே ஆக வேண்­டும் என்ற நிலை ஏற்­ப­ட­லாம்.

குடும்ப வன்­செ­யல் பற்­றிய சிறப்­புப் பணிக்­குழு நேற்று தனது அறிக்­கையை வெளி­யிட்­டது.

அம­லாக்க நடவடிக்­கை­களை மேம்­ப­டுத்த வேண்­டும் என்று அந்­தக் குழு பரிந்­து­ரைத்து இருக்­கிறது.

ஆலோ­ச­னை பெற வேண்­டும் என்று கோரப்­படும் உத்­த­ர­வு­களை மீறு­வதை ஒரு குற்­ற­மாக ஆக்­கு­வது, கட்­டாய மதிப்­பீடு மற்­றும் சிகிச்சை உத்­த­ர­வு­கள் ஆகி­யவை அவற்­றில் அடங்­கும்.

பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர் அடிக்­கடி செல்­லும் இடத்­திற்­குள் சென்று குறிப்­பிட்ட நேரம் காத்­தி­ருக்­கக்­கூ­டாது; அவரை நேரே சென்று பார்க்­கக்கூடாது;

அவ­ரு­டன் தொடர்புகொள்­ளக் கூடாது என்று பிறப்­பிக்­கப்­படும் உத்­த­ர­வு­களை யாரா­வது மீறி நடந்­தால் அதை கைது செய்­யத்­தக்க குற்­ற­மாக அர­சாங்­கம் ஆக்க வேண்டும் என்­றும் அந்­தக் குழு பரிந்­து­ரைக்­கிறது.

இப்­ப­டிப்­பட்ட உத்­த­ர­வு­களை மீறி நடப்­பதை ஒரு குற்­ற­மாக ஆக்­கி­னால், அதி­கா­ரி­கள் உட­னடி அம லாக்க நட­வ­டிக்கைகளை எடுத்து வன்­செ­யல்­கள் அதி­க­ரிப்பதைத் தடுத்­து­விட முடி­யும்.

கட்­டாய மதிப்­பீட்டு, சிகிச்சை உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பிக்க நீதி­மன்­றங்­களை அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் சிறப்­புப் பணிக்­குழு பரிந்­து­ரைத்து உள்­ளது.

பாதக செயல்­களில் ஈடு­ப­டக்­கூ­டிய வாய்ப்பு அதி­கம் உள்­ள­வர்­கள் மறு­வாழ்வு பெறும் வகை­யில் நன்கு வடி­வ­மைக்­கப்­பட்ட, தங்கி சிகிச்சை பெறு­கின்ற ஒரு செயல்­திட்­டம் குறித்து அர­சாங்­கம் ஆரா­ய­வேண்டு என்­ப­தும் குழு­வின் பரிந்­து­ரை­களில் ஒன்று.