ஆகஸ்ட் மூலாதார பணவீக்கம் அதிவேக உயர்வு; 1.1% கூடியது

ஆகஸ்ட் மூலாதார பணவீக்கம் அதிவேக உயர்வு; 1.1% கூடியது

2 mins read
086ecfb4-a4c8-4ca9-9547-9647badebf18
-

சிங்­கப்­பூ­ரில் மூலா­தார பண­வீக்­கம் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக காணாதபடி ஆகஸ்ட் மாதத்­தில் அதி­வே­க­மாக கூடி­யது.

உணவு விலை­கள் அதி­கமாக இருந்­த­தும் வாடகை மற்­றும் இதர பொருட்­க­ளின் செலவு சிறிது குறைந்­த­தும் அதற்­கான முக்­கிய கார­ணம்.

குடி­யி­ருப்பு, தனி­யார் சாலை போக்­கு­வ­ரத்துச் செல­வு­களை நீக்கி­விட்டு மூலா­தார பண­வீக்­கம் கணக்­கி­டப்­ப­டு­கிறது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்­படை­யில் சென்ற மாதம் அது 1.1% அதி­க­ரித்­தது. இந்த அதி­க­ரிப்பு ஜூலை மாதம் 1% ஆக இருந்­தது.

இத­னி­டையே, ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் கொஞ்­சம் குறைந்து சென்ற மாதம் 2.4% ஆக இருந்­தது. இது ஜூலை­யில் 2.5% ஆக இருந்­தது.

தனி­யார் போக்­கு­வ­ரத்து பண­வீக்­கத்­தில் இடம்­பெற்ற லேசான இறக்­கம், மூலா­தார பண­வீக்­கத்­தில் ஏற்­பட்ட அதி­க­ரிப்பை ஈடு­செய்­வதற்குத் தேவையான அளவைவிட கூடு­த­லாக இருந்­த­தா­க­வும் இதன் தாக்­கம் ஒட்­டு­மொத்த பண­வீக்­கத்­தில் பிர­தி­ப­லித்­த­தா­க­வும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக தொழில் அமைச்­சும் தெரி­வித்­தன.

தனி­யார் போக்­கு­வ­ரத்துச் செலவு ஆண்­டுக்­காண்டு அடிப்­படை­யில் 10.8% கூடி­யது. இது ஜூலை­யில் 12.6% ஆக இருந்­தது.

சேவைத் துறை பண­வீக்­கம் ஜூலை­யில் 1.3% ஆக இருந்­தது. இது ஆகஸ்ட்­டில் 1.2% ஆகக் குறைந்­தது. மின்­சா­ரம், எரி­வா­யுச் செலவு ஜூலை­யில் 9.9% கூடி­யது.

இந்த அதி­க­ரிப்பு சென்ற மாதம் 9.7% ஆக இருந்­தது.

குடி­யிருப்பு பண­வீக்­கம் 1.7% ஆக உயர்ந்­தது. இது ஜூலை­யில் 1.4% ஆக இருந்­தது.

உண­வுத்­துறை பண­வீக்­க­மும் ஆகஸ்ட்­டில் 1.5% ஆக அதி­க­ரித்­தது. இது ஜூலை­யில் 1.1% ஆக இருந்­தது.

உலக பண­வீக்­கம் தொடர்ந்து கூடு­த­லா­கவே இருந்து வந்­ததை இந்த ஆணை­ய­மும் அமைச்­சும் அறிக்­கை­யில் சுட்­டின.

இருந்­தா­லும் அந்­தப் பண­வீக்கம் மித­ம­டை­வ­தற்­கான அறி­கு­றி­கள் தெரி­ய­வ­ரு­வ­தா­க­வும் அவை குறிப்­பிட்­டன. மூலா­தார பண­வீக்கம் வரும் மாதங்­களில் படிப்­ப­டி­யாக அதி­கரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

குடி­யி­ருப்புப் பண­வீக்­கம் கூடும் வாய்ப்பு இருப்­ப­தால் 2021 நான்­காவது காலாண்­டில் ஒட்­டு­மொத்த பண­வீக்­கத்­தில் லேசான அதி­க­ரிப்பு இருக்­கும் என்றும் எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

இந்த ஆண்டு முழு­வ­தும் மூலா­தார பண­வீக்­கம் சரா­சரி­யாக 0% முதல் 1% வரைப்­பட்­ட­தாக இருக்­கும் என்று அதி­கா­ர­பூர்வ கணிப்பு தெரி­விக்­கிறது.

அதே­போல, ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் 1%க்கும் 2%க்கும் இடைப்­பட்­ட­தாக இருக்­கும் என்­றும் கணிக்­கப்­பட்டு உள்­ளது.