புதிய போலிஸ் பாவனை பயிற்சி நிலையம் திறப்பு

புதிய போலிஸ் பாவனை பயிற்சி நிலையம் திறப்பு

1 mins read
681d9490-1366-4048-9140-fa7623a3d43e
முன்களபோலிஸ் அதிகாரிகளுக்காக தங்ளின் போலிஸ் பிரிவில் அமைந்துள்ளபுதிய பாவனை பயிற்சி நிலையம். படம்: உள்துறைக் குழு பயிற்சிக் கழகம் -

முன்­கள போலிஸ் அதி­கா­ரி­கள் பய­ன­டை­யும் வகை­யில் தங்­ளின் போலிஸ் பிரி­வில் புதிய நவீன பயிற்சி நிலை­யம் திறக்­கப்­பட்டுள்ளது. இதன் மூலம் யாரே­னும் வீட்­டில் சிக்­கி­யி­ருப்­பது, தற்­கொலை முயற்சி, சந்­தே­கம் தரும் பொட்­ட­லம் பொது இடத்­தில் காணப்­ப­டு­வது போன்ற அவ­ச­ர­மாக கவ­னிக்­க­வேண்­டிய சூழல்­களில் எப்­படி செயல்­ப­டு­வது என்­பதை அதி­கா­ரி­கள் பாவனை பயிற்­சி­களின் மூலம் கற்­றுக்­கொள்வர்.

புதிய நிலை­யம் கடந்த ஏப்­ரல் மாதம் ஒன்­ப­தாம் தேதி­யன்று தொடங்­கப்­பட்­டது. ஏற்­கெ­னவே சுமார் மூவாண்­டு­க­ளுக்கு முன் சுவா சூ காங் உள்­து­றைக் குழு பயிற்­சிக் கழ­கத்­தில் இது­போன்ற பயிற்சி நிலை­யம் திறக்­கப்­பட்­டது.

கல­வ­ரத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வது, வெவ்­வேறு பிரி­வு­கள் ஒன்று­சேர்ந்து நட­வ­டிக்­கை­களில் ஈடு­படு­வது போன்ற பெரிய அள­விலான பாது­காப்பு விவ­கா­ரங்­களைக் கையாள அதி­கா­ரி­களுக்குப் பயிற்­சி­ய­ளிப்பதில் நிலை­யம் கவ­னம் செலுத்தி வரு­கிறது.

இதன் தொடர்­பில் முன்­கள அதி­கா­ரி­க­ளை­யும் உள்­ள­டக்­கும் பயிற்­சி­களை புதிய நிலை­யம் நடத்து­கிறது.

பயிற்­சி­க­ளின்­போது அதி­கா­ரி­கள் வெவ்­வேறு அறை­களில் இருப்­பர். உண்­மை­யான நெருக்­க­டிச் சூழல் போலவே சம்பவங்கள் மெய்­நி­கர் வடி­வில் திரை­யி­டப்­படும். தொலைத்­தொ­டர்பு முறையில் அதிகா­ரி­கள் ஒரு­வ­ரு­டன் ஒரு­வரைத் தொடர்­பு­கொண்டு நிலைமை­யைக் கையாள்­வர். நிலை­யத்­தில் நடத்­தப்­படும் இது­போன்ற பாவனை பயிற்சிகள், கணினி மெய்­நி­கர் விளை­யாட்டுகளைப் போலிருக்கும்.

ஒரு நேரத்­தில் பல்­வேறு உள்­து­றைக் குழுப் பிரி­வு­க­ளைச் சேர்ந்த 40 தலைவர்களும் அதி­கா­ரி­களும் தங்­ளின் போலிஸ் பிரிவு, உள்­துறைக் குழு பயிற்­சிக் கழ­கம் ஆகி­ய­வற்­றின் கூட்டுப் பயிற்­சி­களில் ஈடு­ப­டமுடியும்.