சிங்கப்பூரின் ஆகச் சிறந்த நெடுந்தொலைவோட்ட வீரரான சோ ருய் யோங்கிற்கு, அவரது அணியில் முன்பு இடம்பெற்ற சக நெடுந்தொலைவோட்ட வீரரான ஏஷ்லீ லியூவிற்கு 180,000 வெள்ளியை இழப்பீடாகச் செலுத்துமாறு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 120,000 வெள்ளியைப் பொது இழப்பீடாகவும் 60,000 வெள்ளியைக் கூடுதல் இழப்பீடாகவும் சோ கட்டவேண்டும்.
ஈராண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வழக்கில் சோ தோல்வியுற்றார். தன்னை இழிவுபடுத்தி சோ கருத்துகளை வெளியிட்டதாக லியூ அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். கருத்துகள் வலைப்பூக்களிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுசெய்யப்பட்டன.

