பேனசோனிக் நிறுவனத்தில் ஆட்குறைப்பு

மின்­சா­ரப் பொருட்­களைத் தயாரிக்கும் பேனசோ­னிக் நிறு­வனத்­தின் சிங்­கப்­பூர் கிளை­யில் சுமார் 700 ஊழி­யர்­கள் வேலை­யி­லி­ருந்து ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். இந்­நி­று­வ­னம், குளிர் சாதன வச­திக்­கான 'கொம்ப்­ரெ­சர்' கரு­வியை சிங்­கப்­பூ­ரில் உற்­பத்தி செய்­வதை நிறுத்­த­வுள்­ளது. இத­னைத் தொடர்ந்து ஆட்­கு­றைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

எனி­னும், உல­க­ள­வில் குளிர் சாதன வச­திக்­கான 'கொம்ப்­ரெ­சர்' கரு­வி­யின் ஆய்வு, மேம்­பாட்­டுப் பணி­க­ளுக்­கான அதன் தலை­மை­யகம் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் இயங்­கும் என்று பேனசோ­னிக் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தது.

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­துக்­கான பேன­சோ­னிக் நிறு­வ­னத்­தின் தலை­மை­ய­கம் சிங்­கப்­பூ­ரில் அமைந்­துள்­ளது. ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டுள்­ளோ­ரின் எண்­ணிக்கை, இங்­கி­ருந்த பேன­சோ­னிக் ஊழியர்­களின் எண்­ணிக்­கை­யில் மூன்­றில் ஒரு பங்கு.

உல­க­ள­வில் வர்த்­தக ரீதி­யா­கத் தான் சந்­திக்­கும் சவால்­க­ளைக் கருத்­தில்­கொண்டு குளிர்சாதன 'கொம்ப்­ரெ­சர்' உற்­பத்­தி­யின் தொடர்­பில் வர்த்­தக ரீதி­யாக மறு­ப­ரிசீலனை செய்­­த­தைத் தொடர்ந்து ஆட்­குறைப்பு செய்ய முடி­வெ­டுத்­த­தாக பேனசோ­னிக் கூறி­யது. நான்கு 45 நிமிட அமர்­வு­க­ளின் மூலம் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளுக்­குத் தக­வல் தெரி­வித்­த­தாக நிறு­வ­னம் சொன்­னது. வேலையை இழந்த ஊழி­யர்­களில் பாதிப் பேர் சிங்­கப்­பூ­ரர்­கள், 13 விழுக்­காட்­டி­னர் நிரந்­த­ர­வா­சி­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!