50-59 வயது பிரிவினருக்கு பூஸ்டர் தடுப்பூசி: அக்டோபர் 4 முதல் அழைப்பு விடுக்கப்படும்

சிங்­கப்­பூ­ரில் 50 முதல் 59 வரை வய­துள்ள மக்­க­ளுக்கு அக்­டோ­பர் 4ஆம் தேதி முதல் பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அழைப்பு விடுக்­கப்­படும்.

60 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள முதி­ய­வர்­கள், முதி­யோர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் ஆகி­யோர், செப்­டம்­பர் 15ஆம் தேதி முதல் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்டு வரு­கி­றார்­கள். இப்­போது அந்த வாய்ப்பு 60க்கும் குறைந்த வய­துள்­ள­வர்­களுக்குக் கிடைக்­கிறது.

இந்த வய­துப் பிரி­வி­ன­ருக்கு இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட நோய்­கள் அல்­லது சிகிச்சை பெற வேண்­டிய தேவை­ ஏற்­படு­வதற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் என்­பதை சுகா­தார அமைச்சு அறிக்கை ஒன்­றில் நேற்று சுட்­டிக்­ காட்­டி­யது.

இதன் கார­ண­மாக இளை­யர்­களு­டன் ஒப்­பி­டு­கை­யில் அந்த வய­துப் பிரி­வி­ன­ருக்குக் கடு­மை­யான நோய்­கள் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­து­ உண்டு என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இந்த வய­துப் பிரி­வி­ன­ரில் பலர், இந்த ஆண்டு தொடக்­கத்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர். ஆகை­யால் அவர்­க­ளின் உட­லில் நோய் எதிர்ப்பு சக்தி கால­வோட்­டத்­தில் குறைந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று அமைச்சு விளக்­கி­யது.

மக்­க­ளின் நோய் தடுப்­பாற்­றலை கூட்­டி­னால் கடு­மை­யான நோய்­களுக்கு எதி­ரான உயர்­நிலை பாது­காப்பு தொடர்ந்து இருந்துவரும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

ஃபைசர்-பயோ­என்­டெக் அல்லது மொடர்னா தடுப்­பூ­சியை முற்­றி­லும் போட்­டுக்­கொண்­ட­பின் குறைந்­த­பட்­சம் ஆறு மாதம் கழித்து 50 முதல் 59 வரை வய­துள்­ள­வர்­கள் கூடு­த­லாக ஒரு தடுப்­பூ­சியைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று கொவிட்-19 தடுப்­பூசி வல்­லு­நர்­கள் குழு பரிந்­து­ரைத்து இருக்­கிறது.

பூஸ்­டர் தடுப்­பூசி நீண்­ட­கா­லத்­திற்குக் கடு­மை­யான நோய்­கள் தாக்­கா­மல் அதிக பாது­காப்பைக் கொடுக்­கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சிங்­கப்­பூ­ரில் வியா­ழக்­கி­ழமை நில­வ­ரப்­படி 60 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்ள ஏறத்­தாழ 91,500 முதி­ய­வர்­கள் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டி­ருந்­த­னர். ஏறத்­தாழ 56% முதி­ய­வர்­கள் முன்­ப­திவு செய்து இருக்­கி­றார்­கள் அல்­லது பூஸ்­டர் தடுப்­பூ­சியை ஏற்­கெ­னவே போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.

பூஸ்­டர் தடுப்­பூ­சியைப் போட்டுக்­கொள்­ளும்­படி அழைப்பு விடுக்­கப்­படு­வோ­ருக்கு குறுஞ்­செய்தி மூலம் முன்­ப­திவு தொடர்பு பற்றி தெரி­விக்­கப்­படும்.

அவர்­கள் தடுப்­பூசி நிலை­யத்­தில், பல­துறை மருந்­த­கத்­தில் அல்லது பொது சுகா­தார ஆயத்த மருந்­த­கங்­களில் பூஸ்­டர் தடுப்­பூசி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!