செப்டம்பர் 27 முதல் ஒரு மாதம் வீட்டில் இருந்தே வேலை

சிங்­கப்­பூ­ரில் நடப்பு கொவிட்-19 கிருமி அலையை ஒடுக்­கும் முயற்சி­க­ளின் ஒரு பகுதி­யாக வீட்டி­லி­ருந்தே வேலை பார்க்­கும் நடை­முறை ஒரு மாத காலத்­திற்கு இயல்பான ஒன்­றாக இருக்­கும்.

வீட்­டி­லி­ருந்தே வேலை பார்க்­கக்­கூ­டிய ஊழி­யர்­கள் அந்த ஏற்­பாட்டைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று அதி­கா­ரி­கள் அறி­வித்­த­னர்.

செப்­டம்­பர் 27 முதல் அக்­டோபர் 24 வரை பல்­வேறு நட­வ­டிக்­கை­களும் நடப்­பில் இருந்து வரும் என சுகா­தார அமைச்சு அறிவித்தது.

வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கும் ஏற்­பாட்­டில் 10 நாட்­க­ளுக்கு விலக்கு அளிக்­கும் நடை­முறை இந்த மாத தொடக்­கத்­தில் நடப்­புக்கு வந்­தது. இது நிறுத்தி வைக்­கப்­படும் என்று அமைச்சு நேற்று கூறியது.

பல்­வேறு வேலை­யி­டங்­க­ளுக்­கும் ஊழி­யர்­களைப் பிரித்து அனுப்­பும் நடை­மு­றை­யும் தொடர்ந்து நடப்­பில் இருக்­கக்­கூ­டாது என்று அமைச்சு அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டது.

வேலை­யி­டங்­களில் சமூக ஒன்று­கூ­டல்­க­ளுக்­கும் தொடர்ந்து தடை இருந்­து­வ­ரும். முத­லா­ளி­கள் நீக்குப்­போக்­கான வேலை நேர ஏற்­பா­டு­களைத் தொடர்ந்து நடை­மு­றைப்­படுத்த வேண்­டும். வேலை­யி­டத்­திற்கு வர­வேண்­டிய தேவை­யுள்ள ஊழி­யர்­கள் வேலை­யைத் தொடங்கும் நேரத்­தை­யும் அவர்கள் மாற்­றி­ய­மைக்க வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் அன்­றாட கொவிட்-19 தொற்று கூடிவரு­கிறது. இந்த நிலை­யில் வேலை­யிட விதி­மு­றை­கள் கடு­மை­யா­கின்­றன.

கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டம் நேற்று நடந்­தது. அதில் பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் அறி­விக்­கப்­பட்­டன. அவற்­றின் ஒரு பகு­தி­யாக வேலை­யிட விதி­மு­றை­கள் கடு­மை­யா­கின்­றன.

அன்­றாட தொற்று எண்­ணிக்கை தொடர்ந்து அள­வுக்கு அதி­க­மா­கக் கூடி­னால் அடுத்த இரண்டு வாரங்­களில் ஒரு நாள் பாதிப்பு 3,200 என்ற அளவை எட்­டக்­கூ­டும் என்று சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ஓங் யி காங் நேற்று தெரி­வித்­தார்.

வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்க முடி­யாத ஊழி­யர்­கள், ஒப்­பந்­தக்­கா­ரர்­கள், வியா­பா­ரி­கள் வாரா­வா­ரம் கொவிட்-19 விரைவு பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!