டான் டோக் செங் மருத்துவமனை அவசர பிரிவு விரிவாக்கம்

டான் டோக் செங் மருத்துவமனை அவசர பிரிவு விரிவாக்கம்

1 mins read
f5f04330-75c3-4f61-b1b6-59928974a984
டான் டோக் செங் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே தற்காலிக இடத்தில் ஊழியர்களும் நோயாளிகளும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 அன்­றாட தொற்று கூடு­வதைச் சமா­ளிக்­கும் வகை­யில் டான் டோக் செங் மருத்­து­வ­மனை தனது அவ­சர சிகிச்சை பிரிவை விரி­வு­ப­டுத்தி இருக்­கிறது.

ஒரு கட்­ட­டத்­திற்­குள் தற்­கா­லி­க­மாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட ஓர் இடத்­தில் முழுப் பாது­காப்பு உடை­யு­டன் மருத்­து­வ­மனை ஊழி­யர்­கள் பணி­யாற்றி வரு­வதை காட்­டும் ஒரு காணொளி ஃபேஸ்புக்­கில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றது.

"சமூ­கத்­தில் தொற்று கூடு­வ­தால் அவ­சர சிகிச்சை பிரிவு விரிவு­படுத்­தப்­ப­டு­கிறது. பரி­சோ­த­னை­களை நடத்த அதிக இடம் ஒதுக்­கப்­பட்டு இருக்­கிறது.

"கொவிட்-19 தொற்று ஏற்­படாமல் பாது­காத்துக் கொள்­வ­தற்­கான முயற்சி­க­ளின் ஒரு பகு­தி­யாக இவை இடம்­பெ­று­கின்­றன," என்று மருத்­து­வ­மனை பேச்­சா­ளர் கூறி­ய­தாக நேற்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது. விரி­வாக்­கம் பற்­றிய மேல் விவ­ரங்­களை அந்­தப் பேச்சாளர் தெரி­விக்­க­வில்லை.

ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றப்­பட்ட காணொ­ளியை யார் பதி­வேற்­றி­யது என்­பது தெரி­ய­வில்லை.

இந்த மருத்­து­வ­மனை இது பற்றி ஃபேஸ்புக்­கில் திங்­கட்­கி­ழமை தெரி­வித்து இருந்­தது. ஊழி­யர்­கள் விரி­வாக்கப் பணி­யில் ஈடு­பட்­ட­தைக் காட்­டும் படத்­தை­யும் அது வெளி­யிட்டு இருந்­தது.

இந்த மருத்­து­வ­ம­னை­யின் அவ­சர சிகிச்சை பிரி­வுக்கு மருத்­துவ வாக­னம் மூல­மா­க­வும் நேரடி­யா­க­வும் கொவிட்-19 தொற்­றி­யோரும் தொற்று சந்­தே­க­ ந­பர்­களும் சென்ற வாரம் சிகிச்­சைக்­காக அதிக அளவில் வந்­த­தாக இந்த மருத்து­வ­மனை ஞாயிறன்று ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தது.

அவ­சர சிகிச்சை தேவைப்­ப­டா­த­வர்­கள் அவர்­க­ளுக்கு அரு­கில் இருக்­கும் தனி­யார் மருந்­த­கங்­களை அல்­லது பல­துறை மருந்­த­கத்தை நாடும்­படி அது ஆலோ­சனை கூறி­யது.