பிரதமர்: வேலையிழந்த பேனசோனிக் ஊழியர்களுக்கு என்டியுசி, ஊழியர் சங்கம் ஆதரவளிக்கும்

பிரதமர்: வேலையிழந்த பேனசோனிக் ஊழியர்களுக்கு என்டியுசி, ஊழியர் சங்கம் ஆதரவளிக்கும்

2 mins read
128729d9-7e66-4fa5-aedd-4d870fbb8f8f
-

ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்ட பேன­சோ­னிக் நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­களுக்கு தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சும் (என்­டி­யுசி) மின்­ன­ணு­வி­யல், மின்­சா­ரத் தொழிற்­து­றை­க­ளின் ஐக்­கிய ஊழி­யர் சங்­க­மும் ஆத­ர­வளிக்­கும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

அந்த ஜப்­பா­னிய நிறு­வ­னம் தனது ஊழி­யர்­களில் 700 பேர் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது. அது அந்­நி­று­வ­னத்­தின் மொத்த ஊழி­ய­ர­ணி­யில் மூன்­றில் ஒரு பங்­கு.

குளிர்­சா­தன 'கம்­பி­ர­சர்' சாத­னத்­தின் உற்­பத்தி நட­வ­டிக்­கையை சிங்­கப்­பூ­ரில் மூட அந்­நி­று­வ­னம் முடி­வெ­டுத்­த­தால், ஊழி­யர்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர்.

சிங்­கப்­பூ­ரில் 1972ஆம் ஆண்­டி­லி­ருந்து இயங்கி வரும் பேன­சோ­னிக் தனது தொழிற்­சா­லையை மூட­வி­ருப்­பது பற்றி அறிந்து தாம் கவ­லைப்­பட்­ட­தாக நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பிர­த­மர் லீ குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"கடந்த சுமார் 50 ஆண்­டு­களாக சிங்­கப்­பூ­ரில் இயங்கி வரும் பேன­சோ­னிக் நிறு­வ­னம், இது­வரை கால் பில்­லி­யன் அள­வி­லான குளிர்­சாதன கம்­பி­ர­சர் சாத­னங்­களை உற்­பத்தி செய்து உலக நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­துள்­ளது," என்­றும் திரு லீ சொன்­னார்.

கடந்த 1989ஆம் ஆண்­டில் உலக அள­வில் தனது 100 மில்­லி­ய­ன் ஆ­வது குளிர்­சா­தன கம்­பி­ர­சர் சாத­னங்­கள் உற்­பத்தி செய்­யப்­பட்­ட­தைக் குறிக்க கொண்­டா­டப்­பட்ட நிகழ்ச்சி­யில் திரு லீ பங்­கேற்­றதை அவர் நினை­வு­கூர்ந்­தார்.

அப்­போது பேன­சோ­னிக் உல­கில் இரண்­டா­வது பெரிய குளிர்­சா­தன கம்­பி­ர­சர் சாத­னங்­களை உற்­பத்தி செய்­யும் ஆலை­யாக இருந்­தது.

"சிங்­கப்­பூர் மீது நம்­பிக்கை வைத்து தொடர்ந்து பய­ணித்த பேன­சோ­னிக் நிறு­வ­னத்­துக்கு நன்றி கூறக் கட­மைப்­பட்­டு உள் ளோம்," என்­றும் பிர­த­மர் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

பேன­சோ­னிக் நிறு­வ­னத்­தின் குளிர்­சா­தன கம்­பி­ர­சர் சாதன உற்­பத்தி ஆலை மூடப்­பட்­டா­லும் அதன் உல­க­ளா­விய தலை­மை­ய­கமும் ஆய்வு மற்­றும் மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் இயங்­கும் என்­றும் திரு லீ கூறி­னார்.

"சிங்­கப்­பூர், குறிப்­பாக பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம், பேன­சோ­னிக் போன்ற முத­லீட்­டா­ளர்­களின் பங்­க­ளிப்­பைப் பெரி­தும் மதிக்­கிறது.

"அந்­நி­று­வ­னத்­து­ட­னான பங்­கா­ளித்­து­வத்­தைத் தொடர்ந்து மேற்­கொண்டு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களை அர­சாங்­கம் ஏற்­ப­டுத்­தித் தரும்," என்­றும் திரு லீ தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, பேன­சோ­னிக் நிறு­வ­னத்­தின் ஆட்­கு­றைப்பு பற்றி கருத்­து­ரைத்த மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், ஆட்­கு­றைப்பு பணிக்­கு­ழு­வும் இதர அர­சாங்க அமைப்­பு­களும் வேலை­யி­ழந்த பேன­சோ­னிக் ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் பணி­களை முடுக்கி விட்­டுள்­ளன என்­றார்.

இதன் தொடர்­பி­லான ஊட­கக் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர், "தொழி­லா­ளர் இயக்­கத்­து­டன் வேலை வாய்ப்பு வேலை நிய­ம­னக் கழ­கம் (இ2ஐ) பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­க­ளைத் தொடர்பு கொண்டு பேசி வரு­கின்­றன.

"புதிய வேலை வாய்ப்­பு­க­ளு­டன் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­களை எவ்­வாறு இணைக்­க­லாம் என்­பது குறித்­தும் பேன­சோ­னிக் நிறு­வ­னத்­து­டன் அவ்­விரு அமைப்­பு­கள் பணி­யாற்றி வரு­கின்­றன," என்­றார் அமைச்­சர்.

"வேலை தேடு­வோர் எண்­ணிக்­கை­யை­விட காலி­யான வேலை­களின் எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ளது என்று அண்­மைய ஆய்­வு­கள் காட்­டு­வதைச் சுட்­டிய டாக்­டர் டான், "பாதிக்­கப்­பட்ட ஊழி­யர்­களை விரை­வில் புதிய வேலை­களில் அமர்த்த நம்­பிக்கை கொண்­டுள்­ளோம்," என்­றார்.