32 வயது மாது ஒருவர் தமது அழகுக் கலை நிலையத்தில் சட்டவிரோத நடைமுறைகளைச் செயல் படுத்தியதற்காக நேற்று 10 வார சிறைத் தண்டனை யும் $16,000 அபராதமும் விதிக்கப்பட்டது. வியட்னாமைச் சேர்ந்த டுவோங் பாங் ஆன் எனப்படும் அப்பெண் சிங்கப்பூர் நிரந்தரவாசி. சில வகை அழகு சிகிச்சை முறைகளைச் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் அவர் அவற்றைச் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தம் மீதான குற்றச்சாட்டுகளை நேற்று முன்தினம் அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டது.
சட்டவிரோத சிகிச்சை: சிறை, அபராதம்
1 mins read
-

