கொள்ளைநோய் பரவல் காலத்தில் ஆரோக்கியத்தின் மீது பலரும் கவனம்

கொள்ளைநோய் பரவல் காலத்தில் ஆரோக்கியத்தின் மீது பலரும் கவனம்

1 mins read
b0ee1a2e-a528-4e4e-8971-f9213541c026
-

முத்திரைச் சின்னங்கள் நிலைத்திருக்க புதியன பலவற்றை அறிமுகம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாக பான் பசிஃபிக் ஹோட்டல் குழுமத்தில் தலைமை நிர்வாகி சோயி பெங் சம் கூறியுள்ளார்.

குறிப்பாக கடந்த 18 மாத காலமாக பயணங்கள் முடங்கி இருக்கும் வேளையில் இதனைச் செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளும் தேசிய நூலக வாரியமும் இணைந்து நடத்தும் 'ஆஸ்க்எஸ்டி@என்எல்பி' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் இவ்வாறு கூறினார்.

"வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வருபவர்கள் எல்லாம் புதியவனவாக இருப்பதைக் கண்டு பரவசமடைவார்கள்.

"ஆனால் சிங்கப்பூரர்களுக்கு அது பழகிப்போனவையாக இருக்கும். எனவே புதியன புகுதல் வேண்டும்," என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சி நேற்றிரவு 7 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது.

அண்மை ஆண்டுகளாக ஆரோக்கியம் என்னும் அம்சம் புது வடிவம் கண்டு வருகிறது. குறிப்பாக இந்த கொள்ளைநோய் பரவல் காலத்தில் பலரும் தங்களது மனநலனிலும் ஓய்வின் மீது கவனம் செலுத்துகிறார்கள் என்னும் கருத்து இந்நிகழ்ச்சியில் பகிரப்பட்டது.

அதனை நோக்கமாகக் கொண்டு ஹோட்டல்கள் பல வசதிகளை வழங்குவதாக திரு சோயி குறிப்பிட்டார்.

தமது பான் பசிஃபிக் ஹோட் டல் குழுமம் கிளப் மெட் என்னும் விடுமுறைப் பயணக் குழுமத் துடன் இணைந்து $255 என்பதில் இருந்து தொடங்கும் விலையில் ஆரோக்கியம் சார்ந்த சேவைத் தொகுப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.