தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் 9 பெண்கள் கைது

1 mins read
24a5661d-a0c4-4dc4-972f-dbd2bafa7cad
-

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் செயல்பட்ட உடற்பிடிப்பு நிலையங்களில் ஒன்பது பெண்களை போலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் 22க்கும் 47க்கும் இடைப்பட்ட வயதினர்.

மாதர் சாசனத்தின்கீழ் வகைப்படுத்தப்பட்ட குற்றத்தில் இப்பெண்கள் ஈடுபட்டதாக போலிசார் கூறினர். இம்மாதம் 16, 17 தேதிகளில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் மூன்று இடங்களில் போலிசார் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை நடைபெற்றது.

இந்த மூன்று நிலையங்களும் உரிமம் பெறாமல் உடற்பிடிப்பு சேவை வழங்கியதாகவும் உடற்பிடிப்பு நிலையங்களுக்கான சட்டத்தை இவை மீறியதாகவும் போலிசார் நேற்று தெரிவித்தனர்.

குற்றங்களை விவரிக்காத போலிசார், விசாரணை நடந்து கொண்டிருப்பதாகக் கூறினர்.

உரிமம் பெறாமல் உடற்பிடிப்பு நிலையங்களை நடத்துவோருக்கு $10,000 வரையிலான அபராதம், ஈராண்டு சிறைத் தண்டனை ஆகியன விதிக்கப்படலாம்.