விரைவுச்சாலையில் எட்டு வாகனங்கள் விபத்து; மாது காயம்

விரைவுச்சாலையில் எட்டு வாகனங்கள் விபத்து; மாது காயம்

1 mins read
eeab4974-114f-4205-b253-cb8cd4648890
படம்: ஸ்டோம்ப் -

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே (இசிபி) விரைவுச்சாலையில் புதன்கிழமை (செப்டம்பர் 22) காலை ஒன்றன்பின் ஒன்றாக எட்டு வாகனங்கள் விபத்தில் சிக்கின.

இதில் காயமடைந்த 61 வயது மாது ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சாங்கி விமான நிலையத்தை நோக்கிச்செல்லும் இசிபியில் ஏழு கார்கள், ஒரு டாக்சி சம்பந்தப்பட்ட விபத்து குறித்து காலை 8.36 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் கூறியது.

அந்த விரைவுச்சாலையின் இரண்டாவது தளத்தை வாகனமோட்டிகள் தவிர்க்குமாறு நிலப் போக்குவரத்து ஆணையம் டுவிட்டரில் பதிவிட்டது.

விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்