கொரோனா: புதிய அலையும் மீண்டுவருவதற்கான அணுகுமுறையும்

முரசொலி

கொவிட்-19 கிருமி, சளிக்­காய்­ச்­சலை ஏற்­ப­டுத்தும் கிருமி எல்­லாம் தொற்­று­நோய்க் கிரு­மி­கள்தான். என்­றா­லும் சளிக்­காய்ச்­சல் கிரு­மியைவிட கொவிட்-19 கிருமி மிக­வும் கொலை­கா­ரத்­த­ன­மா­னது என்­பதை உல­கம் இப்­போது கண்­டு­கொண்டுள்ளது.

உரு­மா­றிய கொரோனா டெல்டா கிருமி திட்­ட­வட்டமானது. வினோத­மான பல­ வ­ழி­களில் வேக­மாக அது பர­வு­கிறது. உலக நாடு­களை நிம்மதி யாக ஓய்­வெடுக்­க­வி­டா­மல் அது விரட்­டு­கிறது. பல நாடு­களும் அடிக்கடி தங்­கள் உத்திகளை மிக விரைவாக மாற்­றிக்­கொண்டு தொடர்ந்து செயல்பட வேண்­டிய தேவையை அது ஏற்­ப­டுத்தி வரு­கிறது.

கொவிட்-19 தொற்று ஒழி­யப்­போ­வ­தில்லை என்ற நிலை­யில், புதிய ஒரு வழமைக இது ஆகி இருக்­கிறது. சிங்­கப்­பூ­ரும் இதற்கு விதி­வி­லக்கு அல்ல. அந்தக் கிருமி ஏற்­ப­டுத்­தும் மிரட்­ட­லைச் சமா­ளிக்­கும் வகை­யில் சிங்­கப்­பூர் சூழ்­நி­லைக்­கேற்ப பொருத்­த­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது.

என்றாலும் கடந்த விழக்­கி­ழமை புதி­தாக 1,500 பேரை கிருமி தொற்­றி­விட்டது. இதே நிலையில் போனால் ஒரு நாளில் 3,200 பேர் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய சூழல் ஏற்­ப­ட­லாம். இதை­யெல்­லாம் கருத்­தில்­கொண்டுதான் நாள் ஒன்­றுக்கு புதி­தாக 5,000 பேர் தொற்­றுக்கு ஆளா­னா­லும் அத்­த­கைய ஒரு நிலை­யைச் சமா­ளித்து ஆக வேண்­டும் என்று பல திட்­டங்­களை சிங்­கப்­பூர் மும்­மு­ரப்­ப­டுத்தி வரு­கிறது.

அதி­வே­க­மா­கப் பர­வும் கிரு­மித்­தொற்றைத் தடுத்து நிறுத்திக வேண்­டும்; அதே வேளையில் தொற்று கார­ண­மாக சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறைக்கு அள­வுக்கு அதிக சுமை ஏற்­பட்­டு­வி­டா­மல் பாது காக்க வேண்­டும். கிருமி தொற்­றி­ய­வர்­கள் வீட்­டி­லேயே தங்கி குண­ம­டைய வேண்­டி­ய ஒரு நிலையை கூடுமானவரை உறுதிப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது. இல்ல பரா­ம­ரிப்­புச் சேவை­களை­யும் அதி­க­ரிக்க வேண்டி இருக்­கிறது.

கொவிட்-19 தொற்று கூடிவரும் சூழ­லில் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் தீவிர சிகிச்சை பிரி­வு­க­ளுக்கும் அள­வுக்கு அதி­க­மான நெருக்கடி ஏற்­பட்­டு­வி­டக் கூடிய ஆபத்து இருக்­கிறது. ஏற்­கெ­னவே பல மருத்­து­வ­மனை­க­ளின் அவ­சர சிகிச்சை பிரி­வு­களில் கூட்­டம் அதி­க­ரிப்­பதாக தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த ஆபத்தை முன்­கூட்­டியே தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­றால் கொவிட்-19 தொற்­றைக் கட்டுப்­படுத்த மும்­மு­ர­மாக நட­வ­டிக்கை எடுத்­தால் மட்­டும் போதாது. அவற்­றோடு வீட்­டி­லேயே இருந்து குணமடை­யும் நடை­மு­றை­யும் சமூக சிகிச்சை வசதி­களும் மிக முக்­கி­ய­மான உத்­தி­க­ளாக இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

இவற்றை எல்­லாம் கருத்­தில்­கொண்­டு­தான் இங்கு இப்­போது பல வகை நட­வ­டிக்­கை­கள் அறி­விக்­கப்­பட்டு இருக்­கின்­றன. மக்­கள் இரண்டு இரண்டு பேராக மட்­டுமே கூட முடி­யும். பெரும்­பாலான உண­வ­கங்­களில் முற்­றி­லும் தடுப்­பூசி போட்டுக்­கொண்­ட­வர்­கள் மட்­டுமே அது­வும் இரண்டு இரண்டு பேரா­கத்­தான் சேர்ந்து சாப்­பிட முடி­யும்.

இருந்­தா­லும்கூட, உண­வங்­கா­டி­கள், காப்­பிக்­கடை­களைப் பொறுத்­த­வரை, விதி­மு­றை­களில் மாற்றம் எது­வும் இப்­போ­தைக்கு இருக்­காது.

வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்­கும் நடை­முறை ஒரு மாத காலத்­திற்கு இயல்­பா­ன­ ஒன்றாக இருக்­கும்.

மக்­கள்­தொ­கை­யில் ஆக அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு தடுப்­பூ­சி­யைப் போட்­டு­விட்­டால் கிருமித்தொற்று முடங்­கி­வி­டும், வழக்­க­மான நிலை திரும்­பி­வி­டும் என்று மக்­கள் எதிர்­பார்த்து வந்­த­னர்.

ஆனால் அந்த எதிர்­பார்ப்­புக்கு மாறாக இப்போது கடுமைன கட்­டுப்­பா­டு­களை அவர்­கள் பின்­பற்ற வேண்டி உள்ளது. பொரு­ளி­யலை முற்­றி­லும் முடக்­கா­மல் தேவைக்­கேற்ப துல்­லி­ய­மான இலக்­கு­டன் கூடிய அணு­கு­மு­றையை அர­சு எடுத்து வரு­கிறது.

எந்த நிலை­யி­லும் நம்­மு­டைய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை தொடர்ந்து மீள்­தி­ற­னு­டன் கூடி­ய­தா­கத் திகழ வேண்­டும். போதிய வளங்­களும் மனித ஆற்­ற­லும் எப்­போ­தும் இருந்து வர­வேண்­டும்.

இதை உறு­திப்­ப­டுத்­து­வது கொரோ­னா­வுக்கு எதி­ரான போராட்­டத்­தில் நாம் பெரிய வெற்றி­யைப் பெற அனு­கூ­ல­மான ஓர் அம்­ச­மாக இருக்­கும்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் ஏற்­கெ­னவே அரும்­பா­டு­பட்டு வரு­கி­றார்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த நில­வ­ரங்­களை எல்­லாம் சிங்­கப்­பூரர்­கள் உணர்ந்து நடந்­து­கொள்ள வேண்­டும். இதை புரிந்து­கொண்டு அவர்கள் செயல்பட வேண்­டும்.

கொவிட்-19 தொற்­றில் இருந்து மீண்டு வரக்­கூ­டிய ஆற்றல் உள்ள ஒரு நாடாக திகழ வேண்டும் என்று சிங்­கப்­பூர் விரும்­பு­கிறது.

கல்வி, வணி­கம், தொழில், பய­ணம் முத­லான ஒவ்­வொன்­றை­யும் நிறை­வேற்ற முடிமல் ஒவ்­வொரு நாளும் பல்­வேறு வாய்ப்­பு­களை இழந்து வரக்­கூ­டிய ஒரு நாடா­கத் திகழ சிங்­கப்­பூர் விரும்­ப­வில்லை.

கொவிட்-19 தொற்று உச்­சத்தை தொட்டு பிறகு படிப்­படிக குறை­யும் என்­பதை உல­கம் கண்டு வந்து இருக்­கிறது.

ஆகையால் இப்­போ­தைய தொற்று சூழ­லைக் கண்டு அச்­ச­மடைமல் அதைத் துடைத்­தொ­ழிக்க உறுதி பூணுவதே மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கும்.

கொவிட்-19க்கு எதி­ரான போராட்­டத்­தில் மக்­களுக்குப் பல கட­மை­கள், பொறுப்புகள் உள்ளன. அதுவும் தொற்று தாறுமாறாக அதிகரிக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்­கள் புதிய கட்டுப்பாடுகளை நிறைவேற்ற முற்றிலும் முயல வேண்டும்.

சமூகக் கலந்­துரைடல்­க­ளைக் குறைத்­துக்­கொள்ளவேண்­டும். குறிப்­பாக முதி­ய­வர்­களும் எளி­தில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­கக்கூடிய நிலையில் உள்­ள­வர்­களும் இதை உணர்ந்­து­கொள்ள வேண்டும்.

அடிக்­கடி பரி­சோ­த­னை­ செய்­து­கொள்ள வேண்டும். இப்­படி செய்துகொண்­டால் தொற்று ருக்­கே­னும் ஏற்­பட்­டால் அதை முன்­ன­தா­கவே கண்­டு­பி­டித்­து­வி­ட­லாம்.

தடுப்­பூசி செயல்­திட்­டத்­தில் உல­க­ள­வில் பெரிய சாத­னையை சிங்­கப்­பூர் நிறை­வேற்றி வரு­கிறது.

முதி­ய­வர்­க­ளுக்கு பூஸ்­டர் தடுப்­பூசி இயக்­க­மும் சூடு­பி­டித்து வரு­கிறது. ஆனா­லும் அவற்றை எல்லாம் மீறி உரு­மா­றிய டெல்டா கிருமி வேக­மா­கப் பர­வு­வதைப் பார்த்­தால் மும்­மு­ர­மான தடுப்­பூசி இயக்­கம் மட்­டும் போதாது. அதற்கு மேலும் பல்­வேறு நட­வடிக்­கை­களும் கட்டுப்பாடுகளும் அவ­சர அவ­சி­ய­மா­கின்­றன. கொவிட்-19 கிரு­மி­யு­டன் வாழ­வேண்டும் என்ற ஒரு நிலை ஏற்­பட்­டு­விட்­டால் எப்­படி வாழ்­வது என்பதைக் கற்­றுக்­கொள்­வ­தைத் தவிர வேறு வழி­இல்லை.

பதற்­றம் அடைமல் எல்­லா­வற்­றை­யும் பொறுமை க மதிப்­பிட்டு கொள்­கை­க­ளை­யும் உத்­தி­க­ளை­யும் மாற்­றிக்­கெண்டு, சூழ்­நி­லைக்­கேற்ப மக்­களும் புரிந்­து­ணர்­வு­டன் நடந்­து­கொண்­டால் மிகக் கொடூ­ர­மான, கணிக்க இய­லாத, உயிர்­க்கொல்லி கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான போராட்­டத்­தில் எப்­ப­டி­யும் நாம் வெற்­றி­ பெற்றுவிட­லாம் என்­பதே நம்­பிக்கை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!