செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
34c2fd41-4636-4cac-98b5-f0b409a57f80
-

புதிய கட்டுப்பாடுகள்: கவனம் செலுத்தவேண்டிய அம்சங்கள்

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று கூடிவருவதால் நாளை முதல் அக்டோபர் 24 வரை சுமார் ஒருமாத காலத்திற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும்.

சமூக ஒன்றுகூடல்களில் இருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். அதேபோல உணவு, பானக் கடைகளில் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மட்டுமே சேர்ந்து சாப்பிட முடியும். உணவங்காடி கடைகளிலும் காப்பிக் கடைகளிலும் தடுப்பூசி போட்டவர்களும் போடாத வர்களும் இருவர் வரை சேர்ந்து சாப்பிடலாம்.

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடைமுறை ஒரு மாத காலத்திற்கு இயல்பான ஒன்றாக இருக்கும். வேலை இடத்திற்கு ஊழியர்கள் வரவேண்டி இருந்தால், முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை நேரத்தை தொடர்ந்து ஏற்பாடு செய்து தரவேண்டும்.

தொடக்கப்பள்ளி, சிறப்பு கல்வி பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் அக்டோபர் 7ஆம் தேதி வரை வீட்டிலிருந்தே பாடங்களைப் படிப்பார்கள்.

ஆறு மாதங்களுக்கு முன்பு முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கும் 50 முதல் 59 வரை வயது உள்ளவர்கள், அக்டோபர் 4ஆம் தேதியில் இருந்து பூஸ்டர் ஊசியைப் போட்டுக்கொள்ள குறுஞ்செய்தி மூலம் அழைக்கப்படுவார்கள்.

சனிக்கிழமை முதல் எட்டு வட்டார கொவிட்-19 பரிசோதனை நிலையங்களும் மூன்று அதிவேக பரிசோதனை நிலையங்களும் வார முடிவு நாட்களில் செயல்படும். முன்பதிவு மூலம் இவற்றில் பரிசோதனை செய்துகொள்ளலாம்.

டாக்சி, வாடகை கார்களில் ஒரு நேரத்தில் சேர்ந்து செல்லக்கூடிய பயணிகளுக்கான வரம்பு இரண்டாக இருக்கும். பலரும் சேர்ந்து வாடகை கார்களில் செல்லும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

கொவிட்-19 நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் அடிக்கடி சென்று வந்த இடங்களைக் காட்டும் ஒரு வரைபடத்தை சுகாதார அமைச்சு தனது இணையத்தளத்தில் அக்டோபர் 1 முதல் வெளியிடும்.

அரசாங்கம், வேலை ஆதரவுத் திட்டம் மூலம் கிடைக்கும் உதவியை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 24 வரைப்பட்ட காலத்திற்கு கால்வாசி அதிகரிக்கும். அந்த உதவி $650 மில்லியன் அளவிற்கு இருக்கும்.

முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள முதியோர் சமய நிகழ்ச்சி களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இரு பயணிகளுக்குமேல் டாக்சியில் ஏற்றக்கூடாது

டாக்­சி­க­ளி­லும் தனி­யார் வாடகை கார்­க­ளி­லும் இரு பய­ணி­களை மட்­டும் அனு­ம­திக்­கும் நடை­முறை நாளை முதல் மீண்­டும் நடப்­பிற்கு வரு­கிறது.

இந்த இரு பய­ணி­கள் வரம்பு, வெவ்­வேறு குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்­கள் ஒன்­றா­கப் பய­ணம் செய்­யும்­போதுதான் பொருந்­தும். ஒரே குடும்­பத்­தினர் எனில், எடுத்­துக்­காட்­டாக பெற்­றோர் ஒரு­வர், குழந்­தை­கள் இரு­வர் என மூவர் இருந்­தால், அவர்­கள் ஒரே காரில் பய­ணம் செய்ய அனு­ம­தி­யுண்டு.

அதே வேளை­யில், 'கிராப்­ஹிட்ச்', 'ரைட்­பூல்' உள்­ளிட்ட கார் பகிர்­வுச் சேவை­கள் தற்­கா­லி­க­மாக ரத்து செய்­யப்­ப­டு­கின்­றன. இருப்­பி­னும், குடும்­பங்­கள், நண்­பர்­கள், சக ஊழியர்­கள் என கட்­ட­ணம் சாராத கார் பகிர்­வுப் பயணங்கள், அதி­க­பட்­சம் இரு பய­ணி­கள் என்ற விதி­முறை­யு­டன் அனு­ம­திக்­கப்­படும்.

பய­ணம் செய்­யும்­போது கொவிட்-19 தொற்று பர­வும் அபா­யத்­தைக் குறைக்­கும் நோக்­கி­லும் வெவ்­வேறு குடும்­பங்­க­ளைச் சேர்ந்­தோர்க்கு இடை­யி­லான கலந்துற வாடலைக் குறைக்­கும் வித­மா­க­வும் இந்நட­வ­டிக்கை இடம்­பெறுவதாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.

பய­ணத்­தின்­போது அனை­வரும் முகக்­க­வ­சம் அணிந்­திருக்க வேண்­டி­யது கட்­டா­யம் என்­றும் முகக்­க­வ­சம் அணியா­த­வர்­களை டாக்சி, தனி­யார் வாடகை கார் ஓட்டுநர்­கள் ஏற்ற வேண்­டாம் என்­றும் ஆணை­யம் அறிவுறுத்தி இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் அன்­றாட கிருமி பாதிப்பு 1,500ஐத் தாண்­டி­விட்ட நிலை­யில், கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று முன்­தி­னம் புதிய கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­தது. அதன்­படி, சமூக ஒன்­று­கூடல்­களில் இரு­வர்க்­கு­மேல் இடம்­பெற முடி­யாது.