தொழில் பாதிப்பு; உணவு, பானத் துறை சங்கங்கள் எச்சரிக்கை

உணவு, பானக் கடை­களை நடத்­து­வோ­ருக்கான பாது­காப்பு நிபந்­தனை­களில் பல்­வேறு மாற்­றங்­கள் இடம்­பெற்று வந்­துள்­ளன. இத­னால் அந்­தத் துறைக்கு தொழில் பாதிப்பு அதி­கம் ஏற்­பட்­டு­விட்­டது என்று முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் சங்கங்­களும் தெரி­விக்­கின்­றன.

பல்­வேறு பாது­காப்பு நிபந்­த­னை­களை நடை­மு­றைக்குக் கொண்டு வர போதிய ஊழி­யர்­களை ஒதுக்கு­வது, பொருட்­களைக் கொள்­மு­தல் செய்­வது போன்ற பல சவால்­களைத் தாங்­கள் எதிர்­நோக்­கு­வ­தாக அந்­தத் துறை­யைச் சேர்ந்த கடைக்­காரர்­கள் கூறு­கி­றார்­கள்.

அடிக்­கடி கட்­டுப்­பா­டு­கள் மாறு­வதால் வாடிக்­கை­யா­ளர்­கள் வருவது பாதிக்­கப்­ப­டு­கிறது என்று ‘டிரி­பேகா பார் அண்ட் பிஸ்ட்ரோ’ என்ற நிறு­வனத்­தின் உரி­மை­யா­ளர் டெஸ்­மண்ட் டான் கூறி­னார்.

பொருட்கள் வாங்குவதை கடைகள் குறைப்பதால் உணவுப் பொருள் வழங்கீட்டாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்றார் அவர். தொழிலை பாதிக்கக்கூடிய அளவில் கட்டுப்பாடுகள் மாறி மாறி இடம்பெறும் பட்சத்தில் வரும் மாதங்களில் கடைகள் மூடப்படலாம்.

வேலை இழப்பு ஏற்படலாம் என்று இந்தத் துறையைச் சேர்ந்த வர்த்தக சங்கங்கள் எச்சரித்தன.

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்புகள் அரசாங்கம் அளிக்கும் உதவிகள் காரணமாக ஓரளவுக்கு குறைந்து உள்ளன என்றும் சங்கங்கள் தெரி வித்தன.

முற்றிலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இருவர், இருவராக மட்டுமே உணவகங்களில் சேர்ந்து சாப்பிடலாம் என்ற கட்டுப்பாடு நாளை முதல் அக்டோபர் 24 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

இதற்கு முந்தைய விதிமுறைகள் காரணமாக உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அறவே இல்லாத நிலை இருந்தது.

இப்படி கட்டுப்பாடுகள் மாறி மாறி வருவதால் உணவு, பானத் துறையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக சிங்கப்பூர் உணவகச் சங்கத்தின் பேச்சாளர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!