நம்பிக்கையை உணர்த்தும் ஒளியூட்டு: இந்திராணி

தீபா­வளி கொண்­டாட்­டம் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த ஒன்று என்­பதை லிட்­டில் இந்­தியா ஒளி­யூட்டு நமக்கு விளக்­கு­கிறது என்று பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா தெரி­வித்­துள்­ளார்.

ஒளி­யூட்டு நிகழ்­வில் பங்­கேற்ற அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசுகை யில், "கொள்ளை நோய் பர­வல் காலத்­தில் சவால்­களை எதிர்­நோக்­கும் நாம் அனை­வ­ரும் நம்­பிக்கை என்று ஒன்று இருப்­பதை நினை­வில்­கொள்ள வேண்டும்.

இந்த ஒளி­யூட்டு தீபா­வளித் திரு­நா­ளைக் குறிப்­ப­தோடு இருளை அகற்றும் ஒளி­யை­யும் நினை­வூட்­டு­கிறது.

"நாம் அனை­வ­ரும் சிர­மங்­க­ளைக் கடந்து வரு­வோம்; எல்­லாம் சிறப்­பாக அமை­யும் என்ற நம்­பிக்­கை­யு­டன் நடப்­பில் உள்ள கட்­டுப்­பா­டு­களை இந்­தக் கொண்­டாட்ட காலத்­தில் பின்­பற்­று­வ­தை­யும் மன­தில் கொள்ள வேண்­டும்.

இவ்­வாண்­டின் ஒளி­யூட்டு சற்று மாறு­பட்­ட­தாக இருந்­த­போ­தி­லும் ஒளி­யூட்டப்­பட்­ட­தில் மகிழ்ச்சி," என்­றார் அவர்.

கோயில் கோபு­ரத்துடன் கூடிய அலங்­கார விளக்­கு­கள் சிராங்­கூன் சாலை வீதி­க­ளுக்கு ஒளி­யூட்­டும் அற்­பு­தக் காட்சி தீபா­வளி நெருங்­கி­விட்டதை குறிக்­கின்­றது.

'லி‌‌‌ஷா' எனும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­புடை­மைச் சங்­கம் தீபா­வளி ஒளி­யூட்டு விழாவை 2001ஆம் ஆண்­டி­லி­ருந்து ஏற்­பாடு செய்து வரு­கிறது.

லிட்­டில் இந்­தி­யா­வில் நேற்­றி­ரவு நடந்த இவ்­வாண்­டுக்­கான ஒளி­யூட்டு விழாவை முன்­னிட்டு 'தீபா­வளி உற்­ச­வம்' கலை­நி­கழ்ச்­சிக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

சிறப்பு விருந்­தி­ன­ராக மனி­த­வள அமைச்­ச­ரும் வர்த்­தக தொழில் இரண்­டாம் அமைச்­ச­ரு­மான டான் சீ லெங் கலந்­து­கொண்­டார். இந்­நி­கழ்ச்சி வசந்­தம் ஒளி­வ­ழி­யில் நேர­லை­யா­க­வும் ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

விழா நிகழ்­வு­களை விவ­ரித்த 'லி‌‌‌ஷா' தலை­வர் திரு சி.சங்­க­ர­நா­தன், தீபா­வளி ஒளி­யூட்டு விழாவை நடத்­து­வது என்­பது கடந்த ஈராண்­டு­க­ளாக சவால்­மிக்­க­தாக விளங்­கி­யது என்­றார்.

"இருப்­பி­னும் கொரோனா பர­வல் காலத்­தில் வெளி­நாடு செல்­லாத சிங்­கப்­பூ­ரர்­களை மகிழ்­விக்­கும் நோக்­கில் இவ்­வாண்­டின் ஒளி­யூட்டு நிகழ்ச்சி வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது," என்­றார் அவர்.

வர்த்­தக தொழில் துணை அமைச்­சர் ஆல்­வின் டான், ஜாலான் பசார் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டெனிஸ் புவா ஆகி­யோ­ரும் விழா­வில் பங்­கேற்­றுச் சிறப்­பித்­தனர்.

'கரா­வோக்கே' போட்டி, சமை­யல் வகுப்­பு­கள், புதை­யல் வேட்டை, பட்­டி­மன்ற நிகழ்ச்சி, 'டிக்-டாக்' சவால் என பல்­வேறு இணைய நிகழ்ச்­சி­க­ளை­யும் நேரடிப் போட்­டி­க­ளை­யும் லி‌‌‌ஷா இதர பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து நவம்­பர் 21ஆம் தேதி வரை நடத்­த­வுள்­ளது. இவ்­வாண்டின் தீபா­வளி கொண்டாட்ட நிகழ்ச்­சி­க­ளின் விவ­ரங்­களை https://www.deepavalisg.com/ என்ற இணையப் பக்­கத்­தில் தெரிந்து­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!