புலாவ் உபின் கடற்கரையை, உயிரினங்களை காக்க திட்டங்கள்

1 mins read
c4907a51-08d3-4661-9bdc-d17003796155
-

தேசிய பூங்கா வாரி­யம், புலாவ் உபி­னில் இயற்கை அடிப்­ப­டை­யி­லான இரண்டு கடற்­கரை பாது­காப்பு திட்­டங்­களை அடுத்த ஆண்டு தொடங்­கு­கிறது.

புலாவ் உபின் தீவின் வடக்­கி­லும் தெற்­கி­லும் கடல் அலை கார­ண­மாக பல பகு­தி­களில் ஏற்­பட்டு இருக்­கும் மண் அரிப்­பு­களை நீக்கி, எதிர்­கா­லத்­தில் கடல் மட்­டம் உய­ரும்­போது அதன் கார­ண­மாக அந்­தப் பகு­தி­கள் பாதிக்­கப்­ப­டா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்த இந்­தத் திட்­டங்­கள் உத­வும்.

புலாவ் தெக்­கோங், கிராஞ்சி ஆகி­ய­வற்­றில் இந்த வாரி­யம் வெற்­றி­க­ர­மான முறை­யில் பல திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தி இருக்­கிறது. அதைத் தொடர்ந்து புலாவ் உபி­னில் இரு திட்­டங்­கள் நடப்­புக்கு வரு­கின்­றன.தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று இதனை அறி­வித்­தார். இந்த வாரி­யத்­தின் வரு­டாந்­திர உயி­ரி­யல் பன்­மய விழா­வில் அவர் பேசி­னார்.

புலாவ் உபி­னில் இரண்டு புதிய கடற்­கரை பாது­காப்பு திட்­டங்­கள் தொடங்­கப்­படும். சமூ­கத்­தின் பங்­கா­ளித்­துவ உற­வு­டன் அவை நிறை­வேற்­றப்­படும் என்று சிங்­கப்­பூர் பூம­லை­யில் நடந்த அந்த நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் தெரி­வித்­தார். அந்­தத் திட்­டங்­கள், அந்­தத் தீவின் கடற்­கரை­க­ளைப் பாது­காக்­கும். ஊசி­யி­லைக்­காட்டு தாவ­ரங்­க­ளை­யும் பாது­காக்­கும். அந்­தத் தீவின் உயி­ரி­யல் பன்­ம­யத்தை மீட்டு பாது­காக்­க­வும் அந்­தத் திட்­டங்­கள் உத­வும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.