மோசடிகள் தொடர்பில் சிக்கிய 336 பேர்

மோசடிகள் தொடர்பில் சிக்கிய 336 பேர்

1 mins read
aa710206-6412-44f1-9c94-f9d7d5196d38
-

வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரிவு காவல் துறை­யு­டன் மேற்­கொண்ட இருவார நட­வ­டிக்­கையில் பல மோச­டி­களில் தொட­ர்பு­டைய 236 ஆண்­களும் 100 பெண்­களும் பிடி­பட்­டுள்­ள­னர். இந்­ந­ட­வ­டிக்­கை­கள் செப்டம் பர் 10லிருந்து 24 வரை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக காவல் துறை தெரி­வித்­தது. இந்த சந்­தேக நபர்­கள் இணையக் காதல் மோசடி, மின் வர்த்­தக மோசடி, அரசு அதி­காரி ஆள்­மா­றாட்ட மோசடி, வேலை வாய்ப்பு மோசடி போன்ற 1,439க்கும் மேற்­பட்ட மோச­டி­களுடன் தொடர்­பு­டை­ய­வர்­கள். மோச­டி­யில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் $13 மில்­லி­யனை இழந்­துள்ளனர். சிக்­கிய சந்­தேக நபர்­ கள் 12 வய­துக்­கும் 74 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். கள்­ளப்­பணத்தை நல்­ல ப­ண­மாக்­கு­தல் குறித்­தும் இவர்­கள் விசா­ரிக்­கப்­படு­வ­தா­கக் காவல் துறை தெரி­வித்­துள்­ளது.