சைனாடவுன் கொள்ளைச் சம்பவம்: 5 மணி நேரத்தில் ஆடவர் கைது

சைனாடவுன் கொள்ளைச் சம்பவம்: 5 மணி நேரத்தில் ஆடவர் கைது

1 mins read
8da61410-5f09-4497-8a33-781894ee5808
இவரை போலிஸ் தேடுகிறது. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை -

சைனா­ட­வுன் தங்­கு­வி­டுதி ஒன்­றில் நிகழ்ந்த கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்­ட­தாக 37 வயது ஆட­வர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

கோ சூன் கிம் எனப்­படும் அவர், நேற்று முன்­தி­னம் டெம்­பள் ஸ்தி­ரீட்­டில் உள்ள 'எஸ் இன் சைனா­ட­வுன்' தங்­கு­வி­டு­தியில் கத்­தியை ஏந்­திய நிலை­யில் நால்­வ­ரி­டம் $1,000 கொள்­ளை­ய­டித்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இவ­ரது கூட்­டா­ளி­யான இங் சியேக் கியாங் ஏஞ்­சலோ, 42, என்­ப­வர் இன்­னும் பிடி­ப­ட­வில்லை.

கொள்­ளைச் சம்­ப­வம் குறித்து வெள்­ளிக்­கி­ழமை பின்­னி­ரவு 3.15 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் போலிஸ் தெரி­வித்­தது. பணத்­தைப் பறி­கொ­டுத்­த­வர்­கள் தாக்­கப்­ப­ட­வில்லை.

ஐந்து மணி நேரத்­தில் கோ சூன் கிம்மை தோ பாயோ லோரோங் 1ல் போலி­சார் கைது செய்­த­னர்.

மத்­திய போலிஸ் பிரி­வும் தங்­ளின் போலிஸ் பிரி­வும் இந்த நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டது.

சிங்­கப்­பூர் மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கும் கோ, அங்­கி­ருந்து விடு­விக்­கப்­பட்­ட­தும் மத்­திய போலிஸ் பிரி­வில் விசா­ர­ணைக் காவ­லில் வைக்கப்படுவார் என்று கூறிய அறிக்கை, அவர் எதற்­காக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார் என்ற விவ­ரத்தை வெளி­யி­ட­வில்லை.

இந்­நி­லை­யில் தப்பி ஓடிய இங் சியேக் கியாங் ஏஞ்­சலோ பற்றி அறிந்­த­வர்­கள் 1800-255-0000 என்ற எண்­ணில் தக­வல் தெரி­விக்­க­லாம். அந்­தத் தக­வல்­கள் ரக­சி­ய­மாக வைக்­கப்­படும் என்று போலிஸ் தெரி­வித்­துள்­ளது.

குற்­ற­வா­ளிக்கு தங்க இடம் கொடுப்­பது கடு­மை­யான குற்­றம் என்­றும் அக்குற்றத்திற்கு சிறைத் தண்­டனை, அப­ரா­தம் போன்­றவை விதிக்­கப்­ப­ட­லாம் என்­றும் அது தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.