போர் விமானப் பயிற்சியில்
முதல் பெண்கள் குழு
சிங்கப்பூர் ஆகாயப் படையின் முதல் பெண் படையினர் இருவர் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் எஃ-15எஸ்ஜி போர் விமானப் பயிற்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
போர் விமான கேப்டன் ஜூலியா லிம்மும் போர்க்கருவி கள் செயல்முறைகள் லெஃப்டினண்ட் ஹெனா தியோவும் இணைந்து எஃ-15எஸ்ஜி போர் விமானத்தைச் செலுத்துவர். ஒரே நேரத்தில் விமானப்படையில் சேர்ந்த இவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக இப்பயிற்சியிலும் ஒன்று சேர்ந்து உள்ளதாகக் கூறினர். போர் விமானக் குழுக்கள் தேவைக்கு ஏற்றவாறு அமைக்கப்படும் என்றும் முன்கூட்டியே நிர்ண யிக்கப்பட்டவையல்ல என்றும் கூறப்படுகிறது.
அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் பட்டியல் வெளியீடு
அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் (பிஎஸ்பி) பட்டியல் வெளிநாட்டுத் தலையீடு (எதிர்நடவடிக்கைகள்) மசோதாவின் கீழ் வெளியிடப்படும் என்று உள்துறை அமைச்சு கூறியுள்ளது. இந்த நபர்கள் எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் வெளியிடப்படும் என்று ஸ்ட்டெய்ட்ஸ் டைம்ஸிடம் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். செப்டம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் கண்ட இந்த மசோதா வெளிநாட்டு தலையீட்டை தடுக்கவும், கண்டறியவும் தகர்க்கவும் முற்படும். மேற்கண்டது குறித்து விசாரிக்கவும் வெளிநாட்டு தலையீட்டுக்கு எதிராகச் செயல்படவும், சமூக ஊடக நிறுவனங்கள், இணைய சேவை நிறுவனங்கள் உட்பட பலதரபட்ட நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சர் உத்தரவிட இந்த மசோதா வழி வகுக்கும்.
தகுதியற்ற மனு: மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
விசாரணை தாமதமானதால் தமது கட்சிக்காரருக்கு அநீதி நேர்ந்துள்ளதாக மனு தாக்கல் செய்த வழக்கறிஞரை மேல்முறையீட்டு நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்ததுடன் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. மியா மானிக் என்னும் பங்ளாதேஷிக்காக யூஜின் துரைசிங்கம் தாக்கல் செய்த அந்த மனு முற்றிலும் தகுதியற்ற ஒன்று என் பது தெளிவாகத் தெரிகிறது என்று நீதிமன்றம் தெரி வித்துள்ளது. இதற்காக வழக்கறிஞர் மன்னிப்புக் கேட்கா விடில், ஒழுங்கு நடவடிக்கைக்காக சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கத்திடம் அவர் மீது புகார் செய்யப்படும் என்றும் இதுபோல இன்னொரு முறை நிகழ்ந்தால் அப்போது மன்னிப்புகூட செல்லுபடியாகாமல் போகலாம் என்றும் புதன்கிழமை நீதி மன்றம் கூறியது. 2016 செப்டம்பரில் கைது செய்யப்பட்ட தம்மிடம் 2020 ஜனவரியில் தான் விசாரணை நடத்தப்பட்டது என்றும் அதனால் ஒருவகை உடல்நலக் குறைபாட்டால் தாம் பாதிக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

