நாட்டின் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் முன்னுரிமை அமைச்சர் பாலகிருஷ்ணன்

நாட்டின் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் முன்னுரிமை அமைச்சர் பாலகிருஷ்ணன்

1 mins read
f03e1d84-f99a-41ee-af03-ec6f0d3de01c
-

சிங்கப்பூரில் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் இங்குள்ள மருத்துவ பராமரிப்பில் நெருக்குதல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதும் சிங்கப்பூரின் தலையாய பணி என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆசியான் வட்டாரத்தில் பயணக் கட்டுப்பாட்டின் தளர்ச்சி பற்றி பேசப்பட்டு வருவதாக அவர் நேற்று நியூ யார்க் நகரில் ஐக்கிய நாட்டுப் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

"தொடக்க நடவடிக்கையாக, சுகாதார சான்றிதழ்கள், தடுப்பூசி சான்றிதழ்கள் ஆகியவற்றின் பரஸ்பர அங்கீகாரத்தைநாம் உறுதி செய்யவேண்டும். நமது மின்னிலக்கக் கட்டமைப்புகள், பதிவுகளை உறுதி செய்யும்," என்று டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

"அடுத்த படியாக, எப்போது, எப்படி பயண சுதந்திரத்தை அனுமதிப்பது. இது கடினமாக ஒன்று. சிங்கப்பூரிலும் கூட, எல்லைகளைத் திறப்பதா வேண்டாமா என்பது உள்நாட்டு நிலவரத்தைப் பொறுத்தது,"

" நாம் கவனமாக இருக்கவேண்டிய காலக்கட்டம் இது," என்று அவர் தெரிவித்தார்.