பசி தீர்க்க பாடகர் இயக்கம்

உள்­ளூர் 'ராப்' பிர­ப­லம் யங் ராஜா, 26, ஒருமுறை வீரா­சாமி சாலை வழியே சென்ற­போது, மக்­கள் நீண்ட வரி­சை­யில் உண­வுப் பொட்­ட­லங்­களைப் பெற்­றுக்­கொண்ட காட்சி அவ­ரின் கவ­னத்தை ஈர்த்­தது.

தொண்­டூ­ழி­யர்­க­ளின் உத­வி­யு­டன் நடத்­தப்­படும் 'கிரு‌‌ஷ்ணா'ஸ் இலவச சாப்­பாடு' எனும் லாப­நோக்­க­மற்ற அமைப்பு காலை, மதிய உணவுகளைத் தயா­ரித்து வச­தி­குறைந்­த­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கு­வதைப் பற்றி அறி­ய­வந்த யங் ராஜா, தாமும் இதில் பங்­க­ளிக்க நினைத்­தார்.

கடந்­தாண்டு டிசம்­பர் மாதத்­தில் தமது பிறந்­த­நா­ளன்று இம்­மு­யற்­சிக்கு ஒரு தொகையை அவர் நன்­கொ­டை­யாக வழங்­கி­னார். எனி­னும் இத்­திட்­டத்­துக்கு மேலும் உதவி நல்க முடி­யும் என்ற எண்­ணம் அவ­ருக்­குள் தோன்­றி­யது. இதற்கு இன்ஸ்­ட­கிராம் ஐஜி ஸ்டோ­ரிஸ் (IG stories) கைகொடுத்­தது.

தம்­மு­டைய இன்ஸ்­ட­கி­ராம் ரசி­கர்­களை இம்­மு­யற்­சிக்கு ஆத­ர­வ­ளிக்­கு­மாறு இவ்­வாண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து காணொ­ளிப் பதி­வு­கள் வழி கேட்­டுக்­கொண்­டார் யங் ராஜா. இதற்கு பொதுமக்களிடமிருந்து பெரும் வர­வேற்பு கிடைத்­தது. இரண்டு மாதங்­களில் கிட்­டத்­தட்ட $6,000க்கும் மேற்­பட்ட நன்­கொ­டையை இதன் வழி திரட்ட முடிந்­தது.

கிட்­டத்­தட்ட 12,000க்கும் மேற்­பட்­டோர் இவரது நன்கொடை திரட்டும் முயற்சியால் பல­ன­டைந்­தி­ருப்­பர் என்று யங் ராஜா தெரி­வித்­தார்.

பய­னுள்ள வகை­யில் சமூக ஊட­கங்­களின் தாக்­கம் அமை­ய­லாம் என்­பதை இந்த முயற்சி அவ­ருக்கு உணர்த்­தி­யது.

"இங்கு எல்லா­ருக்­கும் மூன்று வேளை உணவு கிடைத்­து­வி­டு­வ­தில்லை. அடுத்த வேளை உணவு கிடைக்­குமா என்ற நிலை­யிலும் சிலர் நம் சமு­தா­யத்­தில் உள்­ள­னர்.

"உண­வுப் பாது­காப்பு என்­பது என் மன­திற்கு நெருங்­கிய ஒன்று என்­ப­தால் அதன் தொடர்­பான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தி­லும் நிதித் திரட்டு முயற்­சி­க­ளி­லும் ஈடுபட்டு வரு­கி­றேன்," என்று விவ­ரித்­தார் யங் ராஜா.

'மஹா­ராஜா சிங்­கப்­பூர்' என்ற mhrj.sg இன்ஸ்­ட­கி­ராம் கணக்கு மூலம் இவர் தமது ஆத­ர­வுத் திட்­டத்தை நடத்தி வந்­தார். இப்­போது இத்திட்டம் விரி­வ­டைந்­துள்­ளது.

'டேய்­கேர்ஸ்', 'கிவிங்.எஸ்ஜி', 'ஃபுட்பேங்க்' போன்ற சமூக ஆத­ரவு அமைப்பு­க­ளுக்­காக நிதி திரட்­டும் முயற்­சி­களில் ஈடு­பட்டு, வசதி குறைந்­த­வர்­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள் போன்­றோ­ருக்கு இவர் உதவி வரு­கி­றார்.

தேசிய தொண்டூழியர், கொடையாளர் நிலையத்தின் இயக்­கம் ஒன்­றில் யங் ராஜா இடம்­பெற்­றுள்­ளார்.

இந்த இயக்­கத்­தில் சமூ­கத்­தி­ன­ருக்­குப் பல வழி­களில் பங்­க­ளிக்­கும் நபர்­கள், அமைப்­பி­னர், சமூக, நிர்­வா­கத் தலை­வர்­கள் ஆகி­யோர் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூர் சமு­தா­யத்­திற்கு பங்­களிக்க பல­ரும் முன்­வ­ரு­வதை ஊக்­கு­விப்­பதே இந்த இயக்­கத்­தின் நோக்­க­மா­கும். இயக்கம் குறித்து மேல் விவ­ரம் அறிய, https://cityofgood.sg/ என்ற இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.

செய்தி: ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!