மின்னிலக்கத் திறனாளராக சமுதாயத்திற்கு பங்காற்ற விருப்பம்

3 mins read
f2775aaa-24fa-4fa6-aa5b-a07ca2ef7aaf
பிரவீன் (இடம்), ஷஃபீகா ஆகியோர் உட்பட 147 மாணவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று மின்னிலக்க கல்விமான் விருது வழங்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

கி. ஜனார்த்­த­னன்

எதிர்­கால சமு­தா­யத்­திற்­குத் தங்­க­ளின் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பு இருக்க வேண்­டும் என்­பதே 23 வயது ஷஃபீகா, 21 வயது பிர­வீன் இரு­வ­ர­தும் உய­ரிய குறிக்­கோள்.

இவர்­கள் இரு­வ­ரும் 'எஸ்ஜி:டி' (SG:D) எனப்­படும் சிங்­கப்­பூர் மின்­னி­லக்க கல்­வி­மான் விரு­தை கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­ பெற்­ற­னர். சிங்­கப்­பூ­ரின் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்­டிஏ) இவ்­வி­ருதை வழங்­கி­யுள்­ளது.

கடு­மை­யான நிபந்­த­னை­கள் ஏது­மின்றி, விரும்­பிய நிறு­வ­னத்­தில் வேலை செய்­யும் சுதந்­தி­ரத்தை இந்த மானிய விருது அளித்­துள்­ளது என்­றார் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தக­வல் கட்­ட­மைப்பு மாண­வ­ராக உள்ள ஷஃபீகா ரஹமா ஜக்­க­ஃபர் ரஃபிக். இந்த மானிய விரு­துக்­குத் தகுதி­பெற்­றி­ருந்த முன்­னாள் மாண­வர்­க­ளை­யும் ஐஎம்­டிஏ தங்­க­ளுக்கு அறி­மு­கம் செய்து வைத்­தது பய­னுள்­ள­தாக இருந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

இளம் கல்­வி­மான்­கள் தங்­க­ளது விருப்­பங்­க­ளைத் தெரிவு செய்­வ­தற்­கான சுதந்­தி­ரத்தை இந்த விருது வழங்­கு­வ­தாக தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கணினி அறி­வி­யல் துறையில் பயி­லும் பிர­வீன் பால­சுப்­ர­ம­ணி­யம் குறிப்­பிட்­டார்.

இந்த விருது தொடர்­பில் மாண­வர்­கள் மூன்று சுற்று நேர்­கா­ணல்­களில் பங்கேற்றதாக ஷஃபீகா கூறி­னார். மாண­வ­ரின் ஆர்­வம், அவர் எவ்­வாறு சமு­தா­யத்­திற்­குப் பங்­க­ளிக்­கப் போகி­றார் போன்ற அம்­சங்­கள் இந்த நேர்­கா­ணல்­களில் ஆரா­யப்­பட்­டன.

ஏற்­கெ­னவே, வேலை அனு­ப­வப் பயிற்­சியை (internship) மேற்­கொண்­டி­ருந்­த­தும் தங்­க­ளுக்­குச் சாத­க­மாக அமைந்­த­தாக இரு இளை­யர்­களும் தெரி­வித்­த­னர்.

முன்­ன­தாக ஆண்­டர்­சன் தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயின்ற ஷஃபீகா, தாம் தொழில்­நுட்­பத் துறை­யில் இருப்­ப­தாக நினைக்­க­வில்லை எனக் கூறி­னார்.

இத்­து­றை­யில் மேலும் அதி­கப் பெண்­கள் சேர்­வது நல்­லது என்பதை உணர்ந்­தார். தமது பாடத்­திட்­டத்­தில் தொழில்­நுட்­பம் மட்­டு­மின்றி வர்த்­த­கம் சார்ந்த திறன்­களும் இருக்­க­வேண்­டும் என்று முடி­வெ­டுத்த ஷஃபீகா, பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தக­வல் கட்­ட­மைப்பு (Information Systems) பள்­ளி­யில் சேர்ந்­தார். முதல் இரண்டு ஆண்டு­களில் இயந்­தி­ர­வி­யல் கற்­றல் (machine learning), நிர­லி­டு­தல் ஆகி­ய­வற்­றி­லும் பின்­னர் தரவு ஆய்வு, செயற்கை நுண்­ண­றிவு ஆகிய அம்­சங்­க­ளி­லும் கவ­னம் செலுத்­தி­னார்.

பிர­வீன், சிறு வயது முதல் தொழில்­நுட்­பத் துறை­யில் ஆர்­வம் காட்டி வரு­ப­வர். உயர்­நி­லைப் பள்ளி­யின் இயந்­தி­ர­வி­யல் மன்­றத்­தில் ஈடு­பட்­டி­ருந்த அவர், சட்­டத்­து­றைக்­குப் பதி­லாக கணினி அறி­வி­யல் துறை­யைத் தேர்ந்­தெ­டுத்­தார்.

நண்­பர்­க­ளு­டன் இவர் சேர்ந்து உரு­வாக்­கிய 'டிக் நிஞ்சா' (Tick.ninja) என்ற கற்­றல் வள செய­லி­யைக் கிட்­டத்­தட்ட 200,000 பய­னீட்­டா­ளர்­கள் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

தொழில்­நுட்­பத்­தில் அதிக ஆர்­வ­முள்­ள­வர்­கள் அதில் தங்­கள் திறன்­களை ஆழ­மாக வளர்த்­துக்­கொள்­வது முக்­கி­யம். அதே சம­யம், பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணும் திற­னும் முக்­கி­யம் என்­றார் ஷஃபீகா.

தனி­ம­னி­தர்­கள், வர்த்­த­கங்­கள், சமூக அமைப்­பு­கள் எனத் தொழில்­நுட்­பத்தை நாடும் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் பல­த­ரப்­பட்ட சவால்­கள் இருப்­ப­தால் அவர்­க­ளது பார்­வை­யி­லி­ருந்து சிந்­திக்­கக்­கூ­டிய திறன் தேவை என்று விளக்­கி­னார் பிர­வீன்.

"தாங்­கள் இது­வரை யோசித்­தி­ராத, தங்­க­ளுக்­குச் சவால்­மிக்­க­தாக இருக்­கக்­கூ­டிய பிரச்­சி­னை­களை, அவர்­கள் சார்­பில் சிந்­தித்­தி­டும் கட­மை­யு­ணர்வு தொழில்­நுட்ப நிபு­ணர்­க­ளுக்­குத் தேவை," என்­றார் பிர­வீன்.

கற்­றதை எவ்­வாறு பிற­ருக்கு நன்மை அளிக்­கும் வகை­யில் பயன்­ப­டுத்­த­லாம் என்­ப­தைப் பற்றி தெரிந்­து­கொள்­வது நல்­லது என்­றும் அவர் அறி­வு­றுத்­தி­னார்.